திருக்குறள் – பொது அறிவு வினாக்கள்
21
1) ‘உயர்ந்த ஞானத்தைப் புகட்டும் செம்மொழிகளின் தொகுப்பு திருக்குறள்’ எனக்
கூறியவர் யார்?
ஆல்பர்ட் சுவைட்சர்.
2) ‘தெய்வப்புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல்’ எனத் திருக்குறளைப்
புகழும் நூல் எது?
நெஞ்சு விடு தூது.
3) திருக்குறளைத் திருவள்ளுவப்பயன் எனச் சிறப்பித்துக் கூறுபவர்
யார்?
நச்சினார்க்கினியர்.
4) ‘திருக்குறள் அது மன்பதைக்குப் பொது’ என்றவர் யார்?
திரு. வி. க.
5) ‘எல்லாப் பொருளும் இதன்பால் உள’ எனத் திருக்குறளைப் புகழ்ந்தவர் யார்?
மதுரை தமிழ்நாகனார்.
6) ‘நீதி திருக்குறளை நெஞ்சார்ந்த தம் வாழ்வில் ஓதித் தொழுது எழுக ஓர்ந்து’ எனக்
கூறியவர் யார்?
கவிமணி தேசிய விநாயகம்.
7) ‘வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வைத்தார் உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து’
என்பது யார் கூற்று?
பரணர்.
8) திருக்குறளைத் தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?
வைத்தியநாத பிள்ளை.
9) திருக்குறளில் அமைச்சியலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
32.
10) பரிமேலழகர் உரையுடன் திருக்குறளை
முதன் முதலாக இராமானுஜ கவிராயர் பதிப்பித்த
ஆண்டு எது?
1840.
11) திருவள்ளுவர் விருது நிறுவப்பட்ட ஆண்டு எது?
1986.
தமிழ் மேம்பாட்டு ஆணையம் சார்பாக
இந்த விருது வழங்கப்படுகிறது.
இவ்விருதை முதலில் பெற்றவர் குன்றக்குடி அடிகளார்.
இரண்டாவதாகப் பெற்றவர் கி.ஆ.பெ. விசுவநாதம்.
மூன்றாவதாகப் பெற்றவர் ச. தண்டபாணி தேசிகர்.
நான்காவதாகப் பெற்றவர் வ.சுப.மாணிக்கம்.
12) திருக்குறள் முதல் முதலில்
எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது?
மலையாளம் (1595)
13) முதல் திருக்குறள் மாநாடு எப்போது நடைபெற்றது?
1941.
நடத்தியவர் : வீ. முனுசாமி.
நடந்த இடம் : சேலம்.
14) முதன் முதலில் திருக்குறளைப்
பள்ளிகளில் அறிமுகம் செய்த முதலமைச்சர்
யார்?
ஓமந்தூரார்.
15) ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ என்றவர் யார்?
பாரதிதாசன்.
16) திருக்குறளைத் தந்தை தந்த தாய்ப்பால் முப்பால் என்றவர் யார்?
அறிவுமதி.
17) திருக்குறளில் உடைமை என அமையும் அதிகாரங்கள் எத்தனை?
10.
18) மணக்குடவர் உரையை விரும்பிய தமிழ் அறிஞர் யார்?
வ.உ.சிதம்பரம்.
19) திருவள்ளுவரை மானுடக் கவிஞன் என்றவர் யார்?
ஜி.யு. போப்.
20) குறள் பீடம் விருது எந்த அமைப்பால் வழங்கப்படுகிறது?
செம்மொழி தமிழாய்வு நிறுவனம்.
21) திருக்குறளில் இடம் பெறாத எண் எது?
9.
No comments:
Post a Comment