குட் பேட் அக்லியின் கதை!
அஜித்
நடித்து அண்மையில் வெளிவந்த ‘விடாமுயற்சி’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில்,
அடுத்து அவரது நடிப்பில் ஏப்ரல் 10 இல் வெளியாகிறது ‘நல்லது கெட்டது அசிங்கம்’ (குட்
பேட் அக்லி) என்ற திரைப்படம்.
இப்படத்தின்
முன்னோட்டம் (டிரைலர்) அண்மையில் வெளியாகிப் பலரது கவனத்தையும் பெற்றது. இந்நிலையில்
இத்திரைப்படத்தின் கதை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஆதிக்
ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித் மாபெரும் ரௌடியாக (கேங்ஸ்டராக) நடிக்கிறார்.
ஒரு கட்டத்தில் அதெல்லாம் வேண்டாம் என்று அமைதியாகக் குடும்பத்தோடு தலைமறைவாகப் பதுங்கி
வாழ முயல்கிறார். ஆனால் அவருடைய பழைய எதிரி ரௌடிகள் அவரை அமைதியாக வாழ விடாமல் செய்கின்றனர்.
அவற்றை எதிர்த்துப் போராடி அஜித் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே இப்படத்தின் கதை.
ஒரு வகையில் ரஜினி நடித்த பாட்ஷா படத்தின் கதை போல இது இருந்தாலும், அஜித் நடிப்பிலும்,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் இக்கதைப் புதுமையாக இருக்கும் என்று தமிழ்த் திரை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது அப்படித்தானா என்பதை அறிய நாம் ஏப்ரல் 10 வரை காத்திருக்க
வேண்டும்.
*****
No comments:
Post a Comment