Friday, 14 March 2025

தொழில் அல்லது வியாபாரத்தில் வெற்றி பெற மூன்று மந்திரங்கள்!

தொழில் அல்லது வியாபாரத்தில் வெற்றி பெற மூன்று மந்திரங்கள்!

தொழில் அல்லது வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்கான மூன்று மந்திரங்களை விஜய் சேகர் சர்மா கூறுகிறார். இவர் பேடிஎம் நிறுவனத்தை முதன்மை செயல் அதிகாரி. அவர் கூறும் மந்திரங்களை அறிவோமா?

1. வியாபாரம் என்பது ஒரு வழிப் பாதை!

வியாபாரத்தில் நுழைந்ததும் அதிலிருந்து வெளியேறாத முடியாதபடி கதவைப் பூட்டி, சாவியைத் தூர எறிந்து விடுங்கள். அப்படி எறிந்து விட்டால், இனி முன்னோக்கிச் செல்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. பிரச்சனைகள் வரும், தடைகள் உருவாகும். அவற்றைக் கடந்து முன்னோக்கிச் செல்ல வேண்டுமே தவிர, பின்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே வரக் கூடாது.

இதுதான் வியாபாரம் அல்லது தொழிலில் வெற்றி பெறுவதற்கான முதல் மந்திரம்.

2. மக்கள் பிரச்சனைகளைத் தீருங்கள்!

உங்கள் தொழில் அல்லது வியாபாரம் என்பது மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் தருவதாக இருக்க வேண்டும். நீங்கள் தரும் தீர்வுகள் அவர்களுக்குத் திருப்திகரமாகவும் இருக்க வேண்டும்.

இதுவே வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்கான இரண்டாவது மந்திரம்.

3. தடைகளைக் கடந்து செல்லுங்கள்!

வியாபாரத்தில் பல தோல்விகள் வரலாம். பல தடைகள் உண்டாகலாம். ஆனால் என்ன நேர்ந்தாலும் தொடர்ந்து வியாபாரத்தை நடத்துவது ஒன்றே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கான தொழில் மாதிரி அல்லது வியாபார மாதிரியை உங்களால் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் செய்யும் வியாபாரம் சிறியதாக இருக்கலாம். அது ஒரு பெரிய பிரச்சனையில்லை. தொடர்ந்து உங்களது சிறிய வியாபாரத்தில் முன்னேறிக் கொண்டிருந்தால் அது ஒரு நாள் பெரியதாகும்.

இதுவே வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்கான மூன்றாவது மந்திரம்.

இந்த மூன்று மந்திரங்களையும் சிறப்பாகக் கையாண்டதற்கு விஜய் சேகரே ஒரு நல்ல உதாரணம். அவரது பேடிஎம் நிறுவனத்தக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்திருக்கின்றன. பங்குச் சந்தையில் அவரது நிறுவனத்தைப் பட்டியலிட்ட பிறகு விலை இறங்கி பெரும் சிக்கலைச் சமாளித்தார்.

ஓர் ஆண்டுக்கு முன்பாக இந்திய மத்திய வங்கி (ஆர்.பி.ஐ) எடுத்த நடவடிக்கையால் மீண்டும் பேடிஎம் நிறுவனம் பெரும் சரிவைச் சந்தித்தது. எனினும் வியாபாரத்தில் உற்சாகம் எனும் துடுப்பைக் கொண்டு தொடர்ந்து வெற்றிக்கான மந்திரத்தைக் கடைபிடித்தபடி இயங்கிக் கொண்டிருக்கிறார் விஜய் சேகர்.

அப்படி இயங்குவதற்கான காரணத்தையும் விஜய் சேகர் இப்படி சொல்கிறார் :

பிரச்சனைகள் பெரிதாகும் போதுதான் அவற்றைச் சிறப்பாக எதிர்கொள்வதற்கான சக்தி தோன்றும். பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் போது சிறப்பாக வியாபாரம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உருவாகும். அதற்காகவே மிகப்பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம் என்கிறார் விஜய் சேகர்.

*****

No comments:

Post a Comment