பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, எலுவப்பள்ளி ஊராட்சி
ஒன்றிய தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் கௌரிசங்கர் ராஜா குட்டையில் தவறி விழுந்த மாணவர்
நித்திலனைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்தார். காப்பாற்றும் முயற்சி தோல்வியுற்று
மாணவரும் உயிரிழந்தார். உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் முதலமைச்சர் நிவாரண
நிதியிலிருந்து தலா 3 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
2) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டுகளை
மார்ச் 14 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
3) நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
4) தமிழகத்தில் இரண்டு மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்
தொடரப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
5) தென்மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தென்மாநில
மக்களவை உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
6) தமிழகத்தில் 10 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழைக்கு
வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7) 5 டிரில்லியன் பொருளாதாரம் என்கிற இந்தியக் கனவு வெகு தூரத்தில்
இல்லை என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
8) இந்தியாவில் பெண்களுக்கான வேலையின்மை 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
9) இந்தியாவில் சேவைத் துறை பிப்ரவரியில் அபரிமிதமான வளர்ச்சி
கண்டுள்ளது.
10) டாடா ஊர்திகள் தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை 8 சதவீதம்
வீழ்ச்சி கண்டுள்ளது.
11) மார்ச் 9 அன்று துபாயில் நடைபெற உள்ள உலக மட்டைப்பந்து
சம்மேளன சாதனையாளர் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோத உள்ளன.
12) ஒருநாள் மட்டைப்பந்து போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய மட்டைப்பந்து
அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
English News
1) Near Hosur, Krishnagiri district, the
Head master of the Eluvappally Panchayat Union Primary School, Gaurishankar
Raja, died while trying to save a student Nithilan who had fallen into a pond.
The rescue attempt failed and the student also died. The Chief Minister has
ordered to provide Rs 3 lakh each from the Chief Minister's Relief Fund to the
families.
2) The hall ticket for the Class 10th public
examination can be downloaded from March 14.
3) Today is the last day to apply for the
NEET exam.
4) The Madurai High Court bench has
expressed dissatisfaction over the fact that 550 contempt of court cases have
been filed in Tamil Nadu in two months.
5) The Chief Minister of Tamil Nadu has said
that a joint committee of southern state Lok Sabha members will be formed to
protect the rights of southern states.
6) The Meteorological Department has said
that there is a possibility of rain in Tamil Nadu for three days from the 10th.
7) The Prime Minister has expressed
confidence that India's dream of a 5 trillion economy is not far off.
8) Unemployment for women in India has
fallen to 3.2 percent.
9) India's services sector has seen
tremendous growth in February.
10) Tata Motors' sales have fallen by 8
percent.
11) India and New Zealand are set to face in
the final of the ICC Champions Cup to be held in Dubai on March 9.
12) Australian cricket team captain Steve
Smith has announced his retirement from one-day cricket.
No comments:
Post a Comment