பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) மார்ச் 1 ஆம் தேதி தொடங்கிய அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை
ஒரு லட்சத்தைக் கடந்தது.
2) தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் ஓட்டுநர், நடத்துநர்
பணிக்கு ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம்.
3) திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்துக்குத்
தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினர்.
4) குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார்.
5) சென்னையில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ தொடர்வண்டி
வெற்றிகரமாக இயக்கிச் சோதிக்கப்பட்டது.
6) செயற்கை நுண்ணறிவு மற்றும் தவறான தகவல்களால் ஏற்படும் பாதிப்புகள்
குறித்து பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.
7) தமிழகத்தின் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க
வாய்ப்புள்ளது.
8) மார்ச் 25 வரை தமிழகத்தல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9) உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் இந்தியா
118 ஆவது இடத்தில் உள்ளது.
10) அமெரிக்காவில் 60 ஆயிரம் ராணுவப் பணியாளர்கள் திடீர் பணிநீக்கம்
செய்யப்பட்டுள்ளனர்.
11) அமெரிக்காவின் மத்திய கல்வி அமைச்சகத்தை அமெரிக்க அதிபர்
டொனால்ட் டிரம்ப் கலைத்துள்ளார். இது அமெரிக்காவின் பொதுக்கல்வியில் பெரும் பின்னடைவை
ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
12) அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
13) போர்நிறுத்தத்துக்கு உக்ரைன் சம்மதித்துள்ள நிலையில் ரஷ்யாவும்
சம்மதம் தெரிவித்துள்ளது.
14) ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது.
English News
1) The enrollment of students in government
schools that began on March 1 has crossed one lakh.
2) Applications can be made till April 21
for the post of driver and conductor of the Tamil Nadu Transport Corporation.
3) The Chief Minister of Tamil Nadu laid the
foundation stone of the Kalaignar Library and Knowledge Centre in Trichy.
4) The Chief Minister of Tamil Nadu has
warned that strict action will be taken against the culprits, whoever they may
be.
5) The driverless automated metro train has
been successfully tested in Chennai.
6) The President has announced that the
public should be aware of the effects of artificial intelligence and
misinformation.
7) The temperature in Tamil Nadu is likely
to increase by up to 4 degrees Celsius.
8) The Meteorological Department has said
that there is a possibility of moderate rain in Tamil Nadu till March 25.
9) India is at 118th place in the list of
happiest countries in the world.
10) 60 thousand military personnel have been
suddenly dismissed in the United States.
11) US President Donald Trump has dissolved
the US Department of Education. This is expected to cause a major setback in
public education in the US.
12) US President Donald Trump has said that
India will reduce tariffs on American goods.
13) Russia has also agreed to a ceasefire
while Ukraine has agreed.
14) IPL Cricket festival starts today.
No comments:
Post a Comment