Thursday, 13 March 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 14.03.2025 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) இந்தியை வளர்ப்பதற்காகவே தேசிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

2) தமிழகத்திற்குக் கட்டாய மூன்றாவது மொழி தேவையில்லை எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

3) மும்மொழிக் கொள்கை தோல்வியடைந்த திட்டம் என்று தொழில்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

4) அரசுப் பள்ளிகளில் இணையக் கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளே செலுத்துமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

5) அரசுப் பள்ளிகளில் 12 நாட்களில் 41931 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

6) தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) இன்று சட்டசபையில் இன்று தாக்கல் ஆகிறது.

7) தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.23 சதவீதமாக உள்ளது.

8) உலகப் பல்கலைக்கழகங்களின் பாட தரவரிசையில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) 31 ஆவது இடம் பிடித்துள்ளது.

9) சத்துணவு மைய ஊழியர்களிடமிருந்து தணிக்கை செய்ய வேண்டிய 257 கோடி ரூபாயைத் தமிழக அரசு தள்ளுபடி செய்தது.

10) இந்தியா மொரிசியஸ் இடையே பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

11) தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக 50 சதவீதம் பேருக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.

12) இன்று ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் முழு சந்திர கிரகணம் தெரியும்.

13) இம்மாத இறுதியில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியா வருகிறார்.

14) பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தொடர்வண்டி கடத்தலில் 33 பயங்கரவாதிகள் சுட்டுக் கொள்ளப்பட்டனர். 21 பயணிகளும் உயிரிழந்தனர்.

15) ஒரு சவரன் தங்கத்தின் விலை 65 ஆயிரத்தை நெருங்கியது.

English News

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin has alleged that the National Education Policy was introduced to promote Hindi.

2) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that Tamil Nadu does not need a mandatory third language.

3) Industries Minister Palanivel Thiagarajan has said that the three-language policy is a failed project.

4) The Education Department has ordered local bodies to pay the internet fees in government schools.

5) 41,931 students have been admitted to government schools in 12 days.

6) The Tamil Nadu government's budget will be presented in the Assembly today.

7) Tamil Nadu's economic growth is 8.23 ​​percent.

8) The Indian Institute of Technology (IIT) in Chennai has ranked 31st in the subject rankings of world universities.

9) The Tamil Nadu government has waived off Rs 257 crore that was to be audited from nutrition center employees.

10) 8 agreements were signed between India and Mauritius to strengthen mutual cooperation.

11) 50 percent of people in Tamil Nadu have kidney failure due to climate change.

12) A total lunar eclipse will be visible in Africa and America today.

13) US Vice President JD Vance is visiting India at the end of this month.

14) 33 terrorists were shot dead in a terrorist train hijacking in Pakistan. 21 passengers also died.

15) The price of a sovereign of gold reached 65 thousand.

No comments:

Post a Comment