Monday 5 October 2020

Telegram வழியிலான Nistha பயிற்சியில் சேர…

Telegram வழியிலான Nistha பயிற்சியில் சேர…

            Telegram வழியிலான Nistha பயிற்சிக்கு ஆசிரியர்களைத் தொடர்புடைய Telegram Group / Channel இல் ஆசிரியர் பயிற்றுநர்கள் சேர்த்திருப்பர் அல்லது இணைவதற்கான இணைப்பை WhatsApp மூலமாக அனுப்பியிருப்பர். WhatsApp மூலம் அனுப்பப்பட்ட இணைப்பில் இணைவதில் சிரமம் இருப்பின் பின்வரும் இரு வழிமுறைகளில் ஏதேனும் ஒரு வழிமுறையைக் கையாளலாம்.

1.

ஆசிரியர் பயிற்றுநரிடம் சொல்லி அந்த இணைப்பை (link) மட்டும் உங்கள் Telegram எண்ணுக்கு அனுப்பச் சொன்னால் அதன் மூலம் எளிதாக பயிற்சிக் குழுவின் View Channel என்பதைப் பின்தொடர்ந்து பயிற்சிக் குழுவில் நீங்கள் Join செய்து விடலாம்.

2.

பயிற்சியின் இணைப்பை (link) மட்டும் WhatsApp லிருந்து Copy செய்து Telegram இல் உங்கள் பள்ளி ஆசிரியருக்கு அனுப்பினால் அதில் தோன்றும் Channel View ஐ பின்தொடர்ந்து நீங்கள் பயிற்சிக் குழுவில் Join செய்து விடலாம்.

            சில நேரங்களில் WhatsApp இல் அனுப்பப்படும் இணைப்பைத் தொடர்ந்து செல்பவருக்கு அதற்கான Webpage தோன்றாமல் பயிற்சிக் குழுவில் சேர இயலாமல் போகும் போது மேற்காணும் இரு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் பயிற்சிக் குழுவில் எளிதாகச் சேர்ந்து விடலாம்.


No comments:

Post a Comment