Thursday, 12 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (13.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (13.06.2025)

1) அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது.

2) ஏர் இந்திய விமான விபத்தில் 241 பேர் பலியாகியுள்ளனர். விமானம் மோதி ஏற்பட்ட விபத்தில் 50 பேர் இறந்துள்ளனர்.

2) தமிழகத்தைக் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற ஒருங்கிணைந்து செயல்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3) அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு மதிப்பூதியம் வழங்க 27.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4) மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அணை திறப்பால் 17.15 லட்சம் ஏக்கர் நிலம் பயன் பெறும்.

5) ஓகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 7000 கன அடியாக அதிகரித்துள்ளது.

6) சீனாவுடன் வர்த்தக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

7) குடியேற்ற சோதனைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Education & GK News

1) An Air India flight from Ahmedabad to London with 242 passengers on board crashed in Ahmedabad.

2) The condition of many people trapped in the Air India plane crash is critical. The death toll has reached 170 and is expected to rise.

2) Chief Minister M.K. Stalin has appealed to work together to make Tamil Nadu a state free of child labor.

3) Rs 27.20 crore has been allocated for providing honorarium to temporary teachers in government schools.

4) Chief Minister M.K. Stalin opened the Mettur dam. 17.15 lakh acres of land will benefit from the opening of the dam.

5) Water inflow to Okenakkal has increased to 7000 cubic feet.

6) US President Donald Trump has said that a trade agreement has been reached with China.

7) A curfew has been imposed in the city of Los Angeles, USA, due to ongoing protests against immigration enforcement.

Wednesday, 11 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (12.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (12.06.2025)

இன்று சூன் 12 – குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்.

1) இன்று மேட்டூர் அணை திறக்கப்படுகிறது.

2) தமிழ்நாடு பாடநூல் கழக நூல்களை இனி இணைய வழியில் பெறலாம். இதற்கான விற்பனை வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://tntextbooksonline.com/

3) முதியோர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என உயர்நீதி மன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

4) தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என சென்னை, உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

5) வளரும் துறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க 1185 கோடியில் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

6) அரசு மருத்துவமனைகளில் கட்டணப் பிரிவு தொடங்கப்படுவதாகத் தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

7) ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளிநாடுகளின் ஆதரவைப் பெற சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Education & GK News

Today June 12th is World Day Against Child Labour.

1) Mettur Dam is being opened today.

2) Tamil Nadu Textbook Corporation books can now be purchased online. The sale facility for this has been started. Click on the link below to go to the website.

https://tntextbooksonline.com/

3) The Madurai bench of the High Court has said that it is the duty of the government to protect the elderly.

4) The Chennai High Court has ordered the Central Government to release the education funds to be provided to Tamil Nadu.

5) Chief Minister M.K. Stalin has announced projects worth Rs 1185 crore to increase the participation of women in developing sectors.

6) Tamil Nadu Health Minister M. Subramanian has announced that a fee section will be started in government hospitals.

7) The Prime Minister has praised the group of parliamentarians who went to seek support from foreign countries regarding Operation Sindoor.

Tuesday, 10 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (11.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (11.06.2025)

1) இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) முடிவுகள் சூன் 14 அன்று வெளியாகின்றன.

2) பல்தொழில்நுட்ப பட்டயப் படிப்பிற்கு (பாலிடெக்னிக்) சிறப்புத் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3) சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்தில் 1.85 கோடி மதிப்பில் புத்தகப் பூங்காவைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

4) தமிழகத்தில் இருந்து கமலஹாசன் உட்பட 6 பேர் மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்வாகின்றனர்.

5) மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

6) உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பலான எம்எஸ்எஸ்ஸி கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வந்தது.

7) அமெரிக்காவில் குடியேற்ற சோதனைக்கு எதிராக உள்நாட்டுக் கலவரம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறிய டொனால்ட் டிரம்ப் சொந்த நாட்டின் உள்நாட்டுக் கலவரத்தை நிறுத்த முடியாமல் தடுமாறி வருகிறார்.

Education & GK News

1) The results of the National Eligibility cum Entrance Test (NEET) for undergraduate medical courses will be released on June 14.

2) It has been announced that special supplementary exams will be conducted for polytechnic diploma courses.

3) Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated a book park worth Rs 1.85 crore at Chennai Central Railway Station.

4) 6 members from Tamil Nadu, including Kamal Haasan, are elected unopposed as Rajya Sabha members.

5) The Chief Minister has said that Tamil Nadu is number one in the country in maternity and child welfare.

6) The world's largest cargo ship MSC arrived at the Villijnam port in Kerala.

7) There is a risk of civil unrest in the United States against the immigration check. Due to this, Donald Trump, who claimed to have stopped the India-Pakistan war, is struggling to stop the civil unrest in his own country.

பனை மரத்தின் 34 வகைகள்!

பனை மரத்தின் 34 வகைகள்!

பனைமரத்தில் 34 வகைகள் உள்ளன. அவையாவன,

1. ஆண் பனை,

2. பெண் பனை,

3. கூந்தப்பனை,

4. தாளிப்பனை,

5. குமுதிப்பனை,

6. சாற்றுப்பனை,

7. ஈச்சம்பனை,

8. ஈழப்பனை,

9. சீமைப்பனை,

10. ஆதம்பனை,

11. திப்பிலிஸ்பனை,

12. உடலற்பனை,

13. கிச்சிலிப்பனை,

14. குடைப்பனை,

15. இளம்பனை,

16. கூறைப்பனை,

17, இடுக்குப்பனை,

18. தாதம்பனை,

19. காந்தம்பனை,

20. பாக்குப்பனை,

21. ஈரம்பனை,

22. சீனப்பனை,

23.குண்டுப்பனை,

24. அலாம்பனை,

25. கொண்டைப்பனை,

26, ஏரிலைப்பனை,

27. ஏசறுப்பனை,

28. காட்டுப்பனை,

29. கதலிப்பனை,

30. வலியப்பனை,

31. வாதப்பனை,

32. அலகுப்பனை,

33. நிலப்பனை,

34. சனம்பனை.

இப்படியாக 34 வகை பனைமரங்கள் உள்ளன.

*****

Monday, 9 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (10.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (10.06.2025)

1) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். சூன் 30 கடைசித் தேதி ஆகும்.

2) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக உள்ளது. வரும் சூன் 12 வியாழன் அன்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

3) இந்திய விண்வெளி வீரர் சுபான்சூ சுக்லா இன்று விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

4) இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆறாயிரத்தைக் கடந்தது.

5) அதிக குழந்தைகள் பெறுவோருக்கு நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

6) மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

7) தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Education & GK News

1) Applying process for MBA and MCA courses in government and government-aided engineering and arts and science colleges starts. The last date is June 30.

2) The water level of Mettur Dam is 114 feet. Chief Minister M.K. Stalin will inaugurate the Mettur Dam on Thursday, June 12.

3) Indian astronaut Subhanshu Shukla will travel to space today.

4) Corona cases in India have crossed six thousand.

5) Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu has announced that financial assistance will be provided to those who have more children.

6) Internet services have been cut off in Manipur as violence breaks out again.

7) Heavy rain warning has been issued for 11 districts of Tamil Nadu.

Sunday, 8 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.06.2025)

1) வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ வட்டி விகிதம்) 0.5 சதவீதம் இந்திய மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) குறைத்துள்ளது.

2) PIN குறியீட்டிற்குப் பதிலாக அஞ்சல் துறை DigiPIN ஐ அறிமுகம் செய்துள்ளது. இது பத்து குறியீடுகளை உள்ளடக்கியதாகும்.

உங்கள் பகுதியின் DigiPIN ஐ அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கித் தெரிந்துகொள்ளவும்.

https://dac.indiapost.gov.in/mydigipin/home

3) வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4) விரைவில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான (நீட் தேர்வு) முடிவுகள் வெளியாக உள்ளன.

5) தான் உதவியிருக்கா விட்டால் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.

Education & GK News

1) The Reserve Bank of India (RBI) has reduced the repo rate on loans to banks by 0.5 percent.

2) The Department of Posts has introduced DigiPIN instead of PIN code. It consists of ten codes.

Click on the link below to know the DigiPIN of your area.

 https://dac.indiapost.gov.in/mydigipin/home

3) The Meteorological Department has said that a low-pressure area is likely to form in the Bay of Bengal.

4) The results of the NEET will be out soon.

5) Elon Musk has said that Donald Trump could not have won the election if he had not helped him.

Thursday, 5 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (06.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (06.06.2025)

1) கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தேவை ஏற்பட்டால் மாணவர்களுக்கு முகக்கவசம் அணிய வலியுறுத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2) இளநிலை மருத்துவம் (எம்பிபிஎஸ்) மற்றும் பல்மருத்துவம் (பிடிஎஸ்) சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது.

3) மக்கள் இயக்கமாக மஞ்சள் பை இயக்கம் மாற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4) மதுவிலக்கை அமல்படுத்த முயற்சிக்குமாறு தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தியுள்ளது.

5) சூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

6) கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து போதிய உயிர்வளி உருளைகள் மற்றும் சுவாச கருவிகளின் இருப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

7) ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை இரு கட்டங்களாக நடத்துவதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

8) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ளது.

9) தொடர்வண்டி உடனடி முன்பதிவுக்கு (தட்கல் முன்பதிவு) ஆதார் எண் கட்டாயமாகிறது.

10) நீதித்துறையில் ஊழல் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

11) ஓய்வூதியர் கோரும் தகவல்களை 48 மணி நேரத்துக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

12) ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 12 நாட்டினருக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்து டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

13) ரஷ்ய – உக்ரைன் போரில் இரு தரப்பிலும் 3.5 லட்சம் போர்வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

Education & GK News

1) As the spread of Corona continues to increase, School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that students will be urged to wear masks if necessary.

2) Application registration for MBBS and BDS admissions begins today.

3) Chief Minister M.K. Stalin has appealed that the yellow bag movement should turn into a people's movement.

4) The Madurai High Court bench has advised the Tamil Nadu government to try to implement the liquor ban.

5) The monsoon session of Parliament is scheduled to be held from July 22 to August 12.

6) As the spread of Corona continues to increase, the Central Government has ordered the state governments to ensure the availability of adequate Oxygen cylinders and ventilators.

7) The Central Government has decided to conduct the caste-wise population census in two phases.

8) The water level of Mettur dam has risen to 113 feet.

9) Aadhaar number becomes mandatory for Tatkal booking of trains.

10) Chief Justice of the Supreme Court P.R. Kawai has said that corruption in the judiciary will affect public confidence.

11) The State Information Commission has instructed the Tamil Nadu government to provide information requested by pensioners within 48 hours.

12) Donald Trump has ordered a ban on entry into the United States of 12 countries, including Afghanistan and Iran.

13) Research reports have said that 3.5 lakh soldiers have died on both sides in the Russia-Ukraine war.