Friday, 12 April 2024

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான நிரப்பப்பட்ட மாதிரிப் படிவங்கள்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான நிரப்பப்பட்ட மாதிரிப் படிவங்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்குப் பயன்படும் நிரப்பப்பட்ட அனைத்து வகை மாதிரி படிவங்களையும் ஒரே கோப்பாகப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கையேடு

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கையேடு

2024 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்குப் பயன்படும் சுருக்கமான மற்றும் தெளிவான விளக்கக் கையேட்டினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Monday, 8 April 2024

சிறந்த மாணவர்களின் 20 பண்புகளைத் தெரிந்து கொள்வோமா?

சிறந்த மாணவர்களின் பண்புகள் சிலவற்றைத் தெரிந்து கொள்வோமா?

1. அதிகாலையில் முன்பாக எழ வேண்டும். இரவில் ஒன்பது மணிக்கு முன்பாகவே தூங்கிவிட வேண்டும்.

2. அந்தந்த நாள் பாடத்தை அன்றன்றே படித்து விட வேண்டும்.

3. வீட்டுப்பாடத்தைத் தள்ளிப் போடக் கூடாது.

4. கேட்கின்ற பாடத்தை எழுதிப் பார்க்க வேண்டும்.

5. ஆசிரியர்களை மதிக்க வேண்டும்.

6. உதவாத வேலைகளை அதாவது அநாவசியமான வேலைகளை விட்டு விட வேண்டும்.

7. தினசரி நாளிதழ்களைப் படிக்க வேண்டும்.

8. நூலகத்தில் புத்தகம் எடுத்து வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

9. சந்தேகங்களைக் கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

10. மற்றவர்களிடம் கூச்சம் இல்லாமல் பழக வேண்டும்.

11. ஒரு செயலைச் செய்வதற்கு முன் இரு முறை யோசித்து செய்ய வேண்டும்.

12. அவசர வெற்றிகளில் ஆர்வம் காட்டக் கூடாது. Slow and steady, win the race என்ற கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.

13. பொறுமையாகவும் நிதானமாகவும் வெற்றி பெறுவதில் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

14. குறுக்கு வழிகளைப் பரிசீலிக்கவே கூடாது. குறுக்கு வழிகளில் வெற்றி பெற நினைப்பது என்பது நேர்வழியில் வெற்றி பெறுவதை விட பல மடங்கு ஆபத்தானது மற்றும் கடினமானது.

15. நீண்ட கால இலக்கை வகுத்து அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

16. நிறைய படிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்க வேண்டும்.

17. விமர்சனப் பூர்வமாக முன் வைக்கப்படும் கருத்துகளை அணுக வேண்டும்.

18. தற்காலிக தோல்விகளை நிரந்தர தோல்விகளாகக் கருதி விடக் கூடாது.

19. அர்ப்பணிப்போடும் முழு மனதோடும் செய்யப்படும் காரியங்கள் தோற்பதில்லை என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

20. தனக்கும் மற்றவர்களுக்கும் எப்போதும் பயனுள்ளவராக இருக்க வேண்டும்.

*****

Sunday, 7 April 2024

எப்போதெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது தெரியுமா?

எப்போதெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது தெரியுமா?

எப்போதெல்லாம் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதை உளவியல் அறிஞர்கள் ஆராய்ந்து தெரிவித்துள்ளார்கள். அதைப் பற்றித் தெரிந்து கொள்வோமா? ஏன் இதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்வதன் மூலமாகவே அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளைக் கண்டறிய முடியும்.

சிறிவர்களிலிருந்து பெரியவர்கள் வரை பொதுவாக எப்போதெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது என்றால்…

ஆசிரியர் தண்டனை கொடுக்கும் போது அல்லது பணியிடத்தில் தண்டனைக்கு உள்ளாகும் போது

அதிகமான வீட்டுப்பாடம் வழங்கப்படும் போது அல்லது பணியிடத்தில் அதிகமான பணிச்சுமை ஏற்படும் போது

பிறந்த நாளுக்கு யாரும் வர மாட்டார்களோ என்று நினைக்கும் போது

உணவுப் பழக்கத்தில் மாற்றம் ஏற்படும் போது

உடன்படிப்பவர்களுடன் அல்லது பழகுபவர்களுடன் பிரச்சனை ஏற்படும் போது

புதிய வீட்டிற்கு மாறும் போது அல்லது புதிய பணியிடத்தில் பணியேற்க வேண்டி வரும் போது

பள்ளிக்கு புதிய ஆசிரியர் அல்லது அலுவலகத்திற்கு புதிய மேலாளர் வரும் போது

பள்ளி கால அட்டவணை மாறும் போது அல்லது பணியிட நேரம் மாற்றத்துக்கு உள்ளாகும் போது

மதிப்பெண்கள் குறைவாக வாங்கும் போது அல்லது பதவி உயர்வுகள் மறுக்கப்படும் போது

தரநிலை அட்டையைப் (ரேங் கார்டு) பெற்றோர்களிடம் காண்பிக்க நேரும் போது அல்லது பணித்திறனின்மை வெளிப்பட்டு மற்றவர்களின் பரிகாசத்துக்கு ஆளாகும் போது

உடன் பிறப்புகளுடன் அல்லது அருகில் குடியிருப்போருடன் சண்டை நேரிடும் போது

பெற்றோர்களுடன் அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சண்டை ஏற்படும் போது

நெருங்கியவர்களின் மரணத்தின் போது

நம்பிக்கையோடு பழகிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் மிரட்டும் போது

திருட்டு அல்லது கொலைகளைப் பார்க்கும் போது

பயத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களைப் பார்க்கும் போது அல்லது கதைகளைக் கேட்கும் போது

தீவிர நோய்கள் ஏற்படும் போது

பெற்றோர்கள் அல்லது உறவுகள் அல்லது நண்பர்கள் பிரியும் போது

இது போன்ற மனதுக்கு ஒவ்வாத மற்றும் விரும்பாத சூழ்நிலைகள் ஏற்படும் போதெல்லாம் மனதுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் ஏற்படும் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்வதன் மூலமாக அதிலிருந்து விடுபட முடியும்.

*****

Saturday, 6 April 2024

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தேவையான முக்கிய குறிப்புகள்

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தேவையான

முக்கிய குறிப்புகள்

18வது நாடாளுமன்றத் தேர்தல் – 2024 ஐ நடத்தும் தேர்தல் அலுவலர்களுக்குத் தேவையான முக்கிய குறிப்புகள் அடங்கிய PDF கோப்பினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Thursday, 4 April 2024

எப்படி படிக்க வேண்டும் தெரியுமா?

எப்படி படிக்க வேண்டும் தெரியுமா?

எப்படி படிக்க வேண்டும் என்பதற்கு முன்பாகப் படிப்பதை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

படிப்பதை,

1. படிக்கும் முன்பு

2. படிக்கும் போது

3. படித்த பிறகு

என மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்வோம். இனி ஒவ்வொரு பகுதியிலும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

படிக்கும் முன்பு

படிப்பதற்குத்  தயாராக இருங்கள்.

ஆரோக்கியமாக இருங்கள்.

தேவையான புத்தகங்களைத்  தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கையோடு இருங்கள்.

வெற்றியைக் கனவு காணுங்கள்.

படிக்கும் போது

படிப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

முக்கியமானவற்றை அடிக்கோடிடுங்கள்.

குறிப்புகளை எழுதிக் கொள்ளுங்கள்.

படிப்பவற்றை ஊகித்துப் பாருங்கள்.

சந்தேகத்தைத் தெளிவு செய்து கொள்ளுங்கள்.

படித்த பிறகு

படித்த பாடத்திற்குக் குறிப்புகளைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

மீள் பார்வை செய்யுங்கள்.

படித்தப் பாடங்களை மனதிற்குள் திரைப்படம் போல ஓட விட்டுப் பாருங்கள்.

இனி இந்த முறையின்படி படித்துப் பாருங்கள். மதிப்பெண்களைக் குவியுங்கள்.

*****

Monday, 1 April 2024

இந்தியாவைப் பற்றிய ஆச்சரியமான தகவல்கள்!

இந்தியாவைப் பற்றிய ஆச்சரியமான தகவல்கள்!

பூஜ்ஜியத்தை ஓர் எண்ணாகக் கண்டுபிடித்தது இந்தியர்கள்.

பூமியின் வடிவம், சுழலும் வேகம் போன்ற விவரங்களை கி.பி. 499 இல் ஆர்யபட்டர் கண்டுபிடித்திருந்தார்.

உலகின் முதல் பல்கலைக்கழகமான தட்சசீலப் பல்கலைக்கழகம் கி.மு. 700இல் தொடங்கப்பட்டது.

அறிவியல் பூர்வமான ஆயுர்வேத மருத்துவ முறை கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்தியாவில் இருந்து வருகிறது.

கப்பலைப் பற்றி ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்களுக்குத் தெரியும்.

கி.மு. 1000 இல் எழுதப்பட்ட சூரிய சித்தாந்தம் என்ற நூல் பூமியின் சுற்றளவு 7840 மைல் என்று குறிப்பிடுகிறது.  பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 253000 மைல் என்று குறிப்பிடுகிறது.

கணிதத்தில் பையின் மதிப்பை இந்தியர்கள் முன்பே அறிந்திருந்தனர்.

கராத்தே, குங்பூவுக்கு மூலமான களரி தோன்றியது இந்தியாவில்தான்.

நியூட்டன் கண்டுபிடித்த புவி ஈர்ப்பு விசை பற்றி அவருக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பாக சித்தாந்த சிரோன்மணி நூலில் பாஸ்கராச்சாரியர் விவரித்துள்ளார்.

யோகா, சிலம்பம் போன்றவற்றின் தாயகம் இந்தியாதான்.

உலகின் தொன்மையான மொழியான தமிழ் இந்தியாவின் மொழிகளுள் ஒன்று.

இந்தியா குறித்த இத்தகவல்கள் உங்களை இந்தியர் என்பதில் நிச்சயம் பெருமிதம் கொள்ளச் செய்யும்.

*****