Wednesday, 4 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (05.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (05.06.2025)

இன்று சூன் 5 உலக சுற்றுச்சூழல் நாள்.

1) வயது வந்தோருக்கான எழுத்தறிவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

2) தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கு கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது வழங்கப்பட்டுள்ளது.

3) காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில் 300 கோடி மதிப்பில் தானியங்கி இயந்திர (ரோபோ) உதிரி பாக ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

4) வாக்குப்பதிவு நிலவரத்தை உடனடியாக அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் புதிய முறை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

5) பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு துணை நிற்க வெளிநாடுகள் உறுதி பூண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

6) வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 6.33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7) தொடர்வண்டி முன்பதிவுக்கான நிறுவனமான ஐஆர்சிடிசி நிறுவனம் 2.5 கோடி போலி பயனர்களின் கணக்குகளை முடக்கியது.

8) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றியைக் கொண்டாட குவிந்த ரசிர்கர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

9) அமெரிக்காவுக்குள் நோய்க் கிருமியைக் கடத்திய இரு சீன விஞ்ஞானிகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. கைது செய்துள்ளது.

Education & GK News

Today June 5th is World Environment Day.

1) Tamil Nadu ranks first in adult literacy.

2) Tamil scholar Thayammal Aravanan has been awarded the Kalaignar Karunanidhi Semmozhi Award.

3) Chief Minister M.K. Stalin inaugurated a 300 crore robo spare parts factory in Irungattukottai, Kanchipuram district.

4) The Election Commission is going to introduce a new system to know the voting status instantly.

5) Lok Sabha member Kanimozhi has said in Parliament that foreign countries have committed to supporting India against terrorism.

6) 6.33 lakh people have been affected by floods caused by heavy rains in the northeastern states.

7) IRCTC, a train booking company, has frozen the accounts of 2.5 crore fake users.

8) 11 people have been killed in a stampede caused by fans celebrating the victory of the Royal Challengers Bangalore team. More than 50 have been injured.

9) The FBI, the American intelligence agency, has arrested two Chinese scientists who smuggled the virus into the United States.

Tuesday, 3 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (04.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (04.06.2025)

1) சூன் 5 முதல் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்குப் பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2) கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

3) புதிய குடும்ப அட்டைக்கு 1.4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

4) இந்தியாவில் கொரோனா பாதிப்பு நான்காயிரத்தைக் கடந்தது.

5) சென்னையில் கொரோனா பாதிப்பால் ஒருவர் மரணமடைந்தார்.

6) லீ ஜே மியுங் தென்கொரியாவின் அதிபரானார்.

7) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் ஐபில் தொடரை வென்றனர்.

Education & GK News

1) Students who appeared for the Class XII exam can apply for re-totaling and revaluation from June 5.

2) Those who were left out of the Kalaignar Women's Rights Scheme can apply from today.

3) 1.4 lakh people have applied for a new family card.

4) Corona cases in India have crossed four thousand.

5) One person died due to Corona in Chennai.

6) Lee Jae-myung became the President of South Korea.

7) Royal Challengers Bangalore won the IPL series.

எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல்கள்

சங்க இலக்கியம் எனப்படுவது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும். இவை கடைச்சங்கக் காலத்தில் எழுந்ததாகக் கருதப்படுகின்றன.

எட்டுத்தொகை நூல்கள் எவையென,

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று

இத்திறத்த எட்டுத் தொகை.”

எனும் பழம்பாடல் கூறுகின்றது. இதன்படி எட்டுத்தொகை நூல்களாவன,

1. நற்றிணை

2. குறுந்தொகை

3. ஐங்குறுநூறு

4. பதிற்றுப்பத்து

5. பரிபாடல்

6. கலித்தொகை

7. அகநானூறு

8. புறநானூறு

இவற்றுள் ஐந்து அக நூல்கள், இரண்டு புற நூல்கள், ஒன்று அகமும் புறமும் கலந்தது. அவற்றின் விவரம் வருமாறு,

அக நூல்கள்

புற நூல்கள்

அகமும் புறமும் கலந்தது

1. நற்றிணை

1. பதிற்றுப்பத்து

1. பரிபாடல்

2. குறுந்தொகை

2. புறநானூறு

 

3. கலித்தொகை

 

4. அகநானூறு

5. ஐங்குறுநூறு

*****

சேர்க்கை விண்ணப்பம்

ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவத்தைக் கீழே காண்க.



Monday, 2 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.06.2025)

1) இன்று சூன் 3 கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் செம்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

2) சென்னையில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார்.

3) சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்தில் (சென்ட்ரல் மெட்ரோ) 1.85 கோடியில் புத்தகப் பூங்கா திறக்கப்பட உள்ளது.

4) அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் முறைகேடு வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

5) இந்தியாவில் 24 சதவீத பெண்கள் உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6) தொடர் கனமழையால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

7) இந்திய நகர்ப்புற திட்டங்களுக்கு ஐந்து ஆண்டுகளில் 85 ஆயிரம் கோடியை ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது.

8) ஏப்ரல் மாதத்தைத் தொடர்ந்து மே மாதமும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 2 லட்சம் கோடியைக் கடந்தது.

9) கடந்த நிதியாண்டில் 1.28 லட்சம் கோடி ரூபாயைச் சிங்கப்பூர் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.

Education & GK News

1) Today, June 3, the birthday of Kalaignar Karunanidhi is celebrated as the Classic Language Day.

2) Chief Minister M.K. Stalin will launch electric buses in Chennai today.

3) A book park is to be opened at Chennai Central Railway Station (Central Metro) at a cost of Rs 1.85 crore.

4) Gnanasekaran has been given life imprisonment in the sexual misconduct case of an Anna University student.

5) 24 percent of women in India are suffering from obesity.

6) Continuous heavy rains are causing floods in the northeastern states of India.

7) The Asian Development Bank is providing Rs 85,000 crore in five years for Indian urban projects.

8) Following April, the Goods and Services Tax (GST) collection crossed Rs 2 lakh crore in May as well.

9) Singapore invested Rs 1.28 lakh crore in India in the last financial year.

தொல்காப்பியத்தின் காலம்!

தொல்காப்பியத்தின் காலம்!

கிடைத்துள்ள தமிழ் இலக்கண நூல்களில் தொன்மையானது தொல்காப்பியம் ஆகும். நூலின் பெயரால் நூலாசிரியரின் பெயர் வழங்கப்படுவதும் இந்நூலுக்கு உரிய சிறப்பாகும்.

தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் நிலம்தரு திருவின் பாண்டியன் அவையில் அரங்கேற்றினார். அவ்வவையின் அவைத்தலைவராக இருந்தவர் அதங்கோட்டாசான் ஆவார்.

தொல்காப்பியம் இயற்றப்பட்டு அரங்கேற்றப்பட்ட காலம் குறித்த தமிழறிஞர்களின் கருத்துகளை இங்கு ஆராய்வோம்.

“இலக்கியம் இன்றேல் இலக்கணம் இன்றே

எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே”

என்கிற பன்னிருப்படலப் பாயிரத்தின்படி இலக்கிய நூல்கள் பல தோன்றிய பிறகே இலக்கண நூல்கள் தோன்ற இயலும் என்பதால், தொல்காப்பியத்திற்கு முன்பே பல இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும்.

தொல்காப்பியத்திற்கு முன்னர் அகத்தியம் எனும் தமிழ் இலக்கண நூல் இருந்துள்ளது.

“ஆனாப் பெருமை அகத்தியன் என்னும்

அருந்தவ முனிவன் ஆக்கிய முதல் நூல்”

எனும் பன்னிருப்படலப் பாயிரத்தின் வரிகள் தொல்காப்பியத்திற்கு முன்பு அகத்தியம் எனும் இலக்கண நூல் இருந்ததைக் காட்டுகின்றன. அத்துடன் தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்கிற கருத்தும் உண்டு.

இராமாயணத்தில் கம்பர் குறிப்பிடும் “தென்தமிழ் நாட்டகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச்சங்கம்” எனும் செய்தியும், அகத்திய முனிவரின் தமிழ்ச் சங்கம் குறித்து வால்மீகி ராமாயணத்தில் இடம் பெறும் செய்தியும் அகத்தியம் இருந்ததற்கான உண்மைக்கு மேலும் சான்றுகள் பகர்வதாக உள்ளன.

சிவபெருமான் தமிழை அகத்தியருக்கும், வடமொழியைப் பாணினிக்கும் அருளியதாக வழங்கப்படும் தொன்ம வழக்கும் உண்டு.

சங்கக் காலத்தில் எழுந்த நூலே தொல்காப்பியம். அது எச்சங்கக் காலம் என்பதே இங்கு விடை காணப்பட வேண்டிய கேள்வியாகும்.

மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாக இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. முதல் சங்கம் தென்மதுரையிலும், இடைச்சங்கம் கபாடபுரத்திலும், கடைச்சங்கம் மதுரையிலும் விளங்கின. இவற்றுள் முதலிரண்டு சங்கங்கள் கடற்கோளினால் அழிந்து போயின.

முதல் சங்கக் காலத்தில் அகத்தியம் தோன்றியது என்றும் இடைச்சங்கக் காலத்தில் தொல்காப்பியம் தோன்றியதென்றும் தமிழறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள் குறிப்பிடுவதற்குச் சான்றாகக் கடைச்சங்க நூல்களான சங்க இலக்கியங்கள் அமைகின்றன.

தொல்காப்பிய காலத்தில் சகரம் மற்றும் யகரம் மொழி முதல் வராது என வழக்குகள் இருந்தன.

கடைச் சங்க காலத்து நூல்களாகக் குறிப்பிடப்படும் சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டில் சடை, சமம், சகடம் ஆகிய சொற்களில் சகரம் மொழி முதல் அமைவதைக் காணலாம். யவனர் என்ற சொல்லில் யகரம் மொழி முதல் அமைகிறது.

இவ்விதம் தொல்காப்பிய வழக்குகள் கடைச்சங்க நூல்களான சங்க இலக்கியங்களில் மீறப்பட்டிருப்பதைக் கொண்டு கடைச்சங்கத்துக்கு முந்தைய இடைச்சங்கக் காலத்தில் தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தமிழறிஞர்கள் வருகின்றனர்.

அது மட்டுமல்லாது தொல்காப்பியத்தில் நூறாயிரம் வரையிலான எண்களே உள்ளன. எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் கோடி, நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், தாமரை, வெள்ளம் என நூறாயிரத்தைக் கடந்த எண்கள் குறிப்பிடப்படுகின்றன. இதைக் கொண்டும் கடைச்சங்கக் காலத்துக்கு முந்திய இடைச்சங்கக் காலத்து நூலே தொல்காப்பியம் என்ற முடிவைத் தமிழாய்வாளர்கள் எட்டுகின்றனர். அதன்படி இடைச்சங்கக் காலத்தில் கி.மு நான்காம் நூற்றாண்டு காலத்தே தொல்காப்பியம் யாக்கப்பட்டுள்ளது என்பது தமிழறிஞர்களின் துணிபாகும்.

*****

Sunday, 1 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (02.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (02.06.2025)

1) தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

2) புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து பயண அட்டையைப் பயன்படுத்தி இலவசமாகப் பயணிக்கலாம்.

3) கடந்த மே மாதம் அரசுப் பணிகளில் இருந்து 8144 அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.

4) தமிழகத்தில் கோடை மழை இயல்பை விட 97 சதவீதம் அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5) தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே 24 ஆம் தேதி அன்று துவங்கியது. இதைத் தொடர்ந்து கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது.

6) 2025 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்தியாவின் நந்தினி குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Education & GK News

1) The Health Department has said that wearing a face mask is mandatory as the spread of Corona is increasing in Tamil Nadu.

2) School and college students can travel free of cost using their old bus travel cards until a new bus travel card is issued.

3) 8144 government employees retired from government services last May.

4) The Meteorological Department has said that summer rainfall in Tamil Nadu is 97 percent more than normal.

5) The southwest monsoon started early on May 24. Following this, the Kerala is facing floods due to heavy rains.

6) India's Nandini Gupta has been selected as Miss World 2025.