விலையில்லாப் பொதுப் பயன்பாட்டு மென்பொருட்கள்
FOSS
(Free and Open Source Software) என்பதை ‘விலையில்லாப் பொதுப் பயன்பாட்டு மென்பொருள்’
என்று நான் குறிப்பிடுவது ஓரளவு ஒத்து வரும் தமிழாக்கமாகக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.
மேலும் இதை ஆங்கிலத்தில் FOSS எனச் சுருக்கிக் குறிப்பிடுவதைப் போல தமிழில் ‘விபொமெபோ’ (விலையில்லாப்
பொதுப்பயன்பாட்டு மென்பொருள்) எனச் சுருக்கிக் குறிப்பிடவும் வசதியாக இருக்கும் என்று
நினைக்கிறேன்.
பொதுவாக
உலகமெங்கும் பயன்படுத்தப்படும் மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம் விலை கொடுத்து வாங்கிப்
பயன்படுத்தும் இயங்குதளம் ஆகும். இதற்கு மாற்றாக விலையில்லாமல் இணைய வெளியில் கிடைக்கும்
லினக்ஸ் போன்ற இயங்குதளங்களும் இருக்கின்றன.
மைக்ரோசாப்டின்
விண்டோஸ் இயங்குதளத்தில் நாம் பயன்படுத்தும் மென்பொருட்கள் பலவும் விலை கொடுத்து வாங்கியவைகளாக
இருக்கும். எடுத்துக்காட்டாக எம்.எஸ்.வேர்ட், எம்.எஸ்.எச்செல், பேஜ்மேக்கர் போன்றவற்றைக்
குறிப்பிடலாம். இதற்கும் மாற்றாக நாம் விலைகொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் அனைத்து
மென்பொருட்களின் இணையான தரத்துக்கு ‘விபோமெபோ’ (FOSS) வகை மென்பொருட்கள் இணையதளத்தில்
கிடைக்கின்றன. இதனை இன்னும் புரியும் படியாக விளக்க வேண்டுமானால்,
MS Word
க்கு இணையாக Libre Office Writer ஐப் பயன்படுத்தலாம்.
MS
Excel க்கு இணையாக Libre Office Calc ஐப் பயன்படுத்தலாம்.
MS
Power Point க்கு இணையாக Libre Office Impression ஐப் பயன்படுத்தலாம்.
MS
Paint க்கு இணையாக Tux Paint ஐப் பயன்படுத்தலாம். இதே போல் நீங்கள் பயன்படுத்தும் விலைகொடுத்து
வாங்கிய Video editing, Audio editing, Education related மென்பொருட்கள் அனைத்திற்கும்
‘விபோமெபோ’ (FOSS) வகை மென்பொருட்களை விலையில்லாமல் அதாவது பைசா காசு செலவில்லாமல்,
நீங்கள் விலை கொடுத்து வாங்கிய மென்பொருட்களின் அதே தரத்திற்கு இணையாகப் பதிவிறக்கிப்
பயன்படுத்தலாம். மேலும் இந்த ‘விபோமெபோ’ (FOSS) வகை மென்பொருட்கள் விண்டோஸ், மகின்டோஸ்,
லினக்ஸ் என்று அனைத்து வகை இயங்குதளத்திலும் இயங்கும் வகையில் இருப்பது இதன் தனிச்சிறப்பு
எனலாம்.
உங்களுக்கு
எவ்வகை மென்பொருட்கள் தேவையாக இருக்கிறதோ அவ்வகையிலான அனைத்து வகை மென்பொருட்களும்
‘விபோமெபோ’ (FOSS) வில் கிடைக்கின்றன. அவற்றுள் கல்வி சார் பயனுடைய மென்பொருட்களைத்
தொடர்ச்சியாக இனி ஒவ்வொரு நாள் பதிவிலும் காண்போம்.
இனி ‘விபோமெபோ’
(FOSS) வகை மென்பொருட்கள் கிடைக்கும் இணையதளத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த
இணையதளத்திற்குச் சென்று நீங்கள் தேடலை நிகழ்த்தினால் உங்களுக்குத் தேவையான அனைத்து
வகை மென்பொருட்களும் விலையில்லாமலும் அதே நேரத்தில் விலை கொடுத்து வாங்கிய மென்பொருட்களின்
தரத்துடனும் கிடைக்கும். ‘விபோமெபோ’ (FOSS) வகை மென்பொருளுக்கான இணையதள முகவரிக்குக்
கீழே சோடுக்கவும்.
https://sourceforge.net/