Wednesday 31 March 2021

குவாலிட்டி கன்ட்ரோல் அலுவலராக விண்ணப்பிக்கலாம்

குவாலிட்டி கன்ட்ரோல் அலுவலராக விண்ணப்பிக்கலாம்

            BIS எனப்படும் Bureau of Indian Standards நிறுவனம் இந்திய அரசின் தரச்சான்று வழங்கம் அதிகாரப்பூர்வ அமைப்பாகும். இந்திய முழுமைக்குமான அனைத்துப் பொருட்களின் தரத்தை நிர்ணயிக்கும் பணியை இந்நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது குவாலிட்டி கன்ட்ரோல் அலுவலர் பயிற்சிக்கான சான்றிதழ் படிப்பை நொய்டா உள்ளிட்ட நாடு முழுவதும் அமைந்துள்ள அதன் சோதனைக் கூடங்கள் வழியாக வழங்க உள்ளது.

            மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், வேதியியல், மைக்ரோ பயாலஜி ஆகிய துறைகளில் வழங்கப்படும் இப்பயிற்சியானது நான்கு வார கால அளவைக் கொண்டதாகும்.

            இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ. 10,000/- ஆகும். இப்பயிற்சி குறித்த மேலதிக விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://bis.gov.in/wp-content/uploads/2021/02/Brochure-QCP-4Jan2021_revised.pdf

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.manakonline.in/MANAK/login

No comments:

Post a Comment