Wednesday 24 March 2021

NEST தேர்வுக்கு விண்ணப்பியுங்கள்

NEST தேர்வுக்கு விண்ணப்பியுங்கள்

            ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்.ஸி. படிப்புகளுக்கான சேர்க்கை பெறுவதற்காகத் தேசிய அளவில் நடத்தப்பெறும் நுழைவுத் தேர்வே NEST (National Entrance Screening Test) எனப்படும் தேர்வாகும். இத்தேர்வை எழுதுவதன் மூலம் புவனேஸ்வரில் உள்ள National Institute of Science Education and Research மற்றும் மும்பையில் உள்ள Department of Atomic Energy Centre for Excellence in Basic Science ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் ஐந்தாண்டுகளுக்கான ஒருங்கிணைந்த Integrated M.Sc. படிப்பை Mathematics, Physics, Chemistry, Biology ஆகிய பிரிவுகளில் படிக்கலாம். இந்நுழைவுத் தேர்வை எழுத இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி வழித் தேர்வாக அப்ஜெக்டிவ் முறையில் இந்நுழைவுத் தேர்வு நடத்தப்பெறும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

30.03.2021

நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்

14.06.2021

மேலும் இத்தேர்வு குறித்து அறியவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.nestexam.in/

No comments:

Post a Comment