Thursday 18 March 2021

கல்விசார் குறுங்காணொளி தயாரித்தல்

கல்விசார் குறுங்காணொளி தயாரித்தல்

            மாநில கல்வி ஆராய்ச்சி இயக்ககம் (SCERT) ஆசிரியர்களைக் கொண்டு கல்விசார் குறுங்காணொலிகளை எடுப்பதற்கு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்கான செயல்திட்டங்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET), ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் (BIET) மூலமாகச் செயல்படுத்தபப்டுகிறது. கல்விசார் குறுங்காணொலிகளைத் தயாரிக்கும் ஆசிரியர்கள் இவ்வாண்டு கீழ்காணும் 3 தலைப்புகளில் குறுங்காணொலிகளைத் தயாரிக்கலாம். அத்தலைப்புகளாவன,

1.

மாவட்டத்தின் சிறப்புகள் பற்றிய குறுங்காணொளி (பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளதை ஒட்டித் தயாரிக்கப்பட வேண்டும்)

2.

கடினப் பகுதிகளை எளிமையாக்கும் காணொளி. இக்காணொளிகள் எளிமையான மற்றும் புதுமையான உத்திகளைக் கொண்டிருக்க வேண்டும்.

3.

கற்றல் – கற்பித்தல் செயல்முறைகள். மாணவர்களை ஆர்வமுடன் காண வைக்கும் கற்றல், கற்பித்தல் அடங்கிய செயல்முறைகள் கொண்டதாக இவ்வகைக் காணொளிகள் அமைய வேண்டும்.

இக்காணொலிகளுக்கான மேலும் சில எதிர்பார்க்கப்படும் வரைமுறைகளாவன,

1.

கால வரையறை

5 லிருந்து 10 நிமிடங்களுக்குள்

2.

ஒளி – ஒலி நிபந்தனை

போதுமான வெளிச்சம், தெளிவான ஒலிப்பதிவு

3.

கருவிப்பயன்பாடு

பாடத்தலைப்புக்கு ஒத்த கற்றல் கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்தலாம்.

4.

பவர்பாய்ண்ட் உபயோகம்

கருப்பு – வெள்ளையில் அமைய வேண்டும்.

5.

Resolution

9020×1080 Full HD

6.

Landscape Mode

16:9

7.

இசை

சொந்த இசை அல்லது காப்புரிமை நெகிழ்வுத்தன்மை உடையதாக இருக்க வேண்டும்.

8.

Video Format

MP4

9.

பாட விளக்கம்

ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் பாடத்தின் முக்கிய வார்த்தைகள் (Key Words) உடையதாக இருக்க வேண்டும்.

10.

காணொளி எதிர்பார்ப்பு

கற்றல் விளைவுகளை ஏற்படுத்துவதாகவும், உண்மைத்தன்மை நிரம்பியதாகவும், சர்ச்சைக்கு இடமில்லாத வகையிலும் அமைய வேண்டும்.

11.

காணொளிப் பதிவில்  இடம் பெற வேண்டியது

Top Right : Kalvi TV Logo

Top Left : SCERT Logo

Bottom Right : Sign Language

Scrolling : Class, Subject, Description

இவ்வரையறைகளுக்கு உட்பட்டு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் குறுங்காணொலிகளைத் தயாரித்து மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திற்கு (DIET) வழங்கலாம்.  இதனை PDF ஆகப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

No comments:

Post a Comment