எம் பள்ளி மாணவர்களின் சுவர் சித்திரங்கள்
கல்வி – சுகாதாரம்
– பாதுகாப்பு குறித்த மாணவர்களுக்கான சுவர் சித்திரப் போட்டிகள் நடத்த சொன்ன போது முதலில்
ஆசிரியர்களாகிய எங்களுக்குத் தயக்கமாகத்தான் இருந்தது. நடுநிலைப் பள்ளியில் பயிலும்
மாணவர்களால் தூரிகை பிடித்து, எண்ணெய் வண்ணக் கலவையைக் (ஆயில் பெயிண்ட்) கொண்டு ஓவியம்
தீட்டி விட முடியுமா என்ற ஐயப்பாடே அந்தத் தயக்கத்துக்குக் காரணம். ஆனால் தூரிகை பிடித்த
மாணவர்கள் ஆசிரியர்களின் தயக்கத்தைப் போக்கி விட்டார்கள் என்பதோடு ஆசிரியர்களும் வியக்கும்
வண்ணம் ஓவியங்களைத் தீட்டி விட்டார்கள். முதன் முதலாக கையில் தூரிகை பிடித்து எண்ணெய்
வண்ணக் கலவையைக் கொண்டு இவ்வோவியங்களை மாணவர்கள் வரைந்து முடித்ததும் இவ்வோவியங்களை
எங்கள் மாணவர்களா வரைந்தார்கள் என்பது ஆசிரியர்களாகிய எங்களுக்கும் ஆச்சரியமாகத்தான்
இருந்தது. இதைக் காணும் உங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறோம்.
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமை அளவிட
முடியாது என்பதை இந்த அனுபவத்திலிருந்து ஆசிரியர்களாகிய நாங்கள் அறிந்து கொண்டோம்.
நீங்களும் உங்களது மேலான கருத்துகளைப் பகிருங்களேன், நாங்கள் இதிலிருந்து மேலும் அறிந்து
கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் விதமாக. மாணவர்கள் வரைந்த
சுவர் சித்திரங்கள் கீழே இதோ உங்கள் பார்வைக்கு …
No comments:
Post a Comment