கலெக்டராக விண்ணப்பிக்கலாம்
IAS,
IPS, IFS, IRS போன்ற 24 வகை உயர் பணியிடங்களில் உள்ள 712 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான
2021 ஆம் ஆண்டுக்கான UPSC தேர்வுக்கு மார்ச் 24 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வானது முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு,
நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளை உள்ளடக்கியதாகும். இம்மூன்று நிலை தேர்வுகளில்
தேர்வு பெறுவோர் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலான தரப் பட்டியலைப் பொருத்து
மாவட்ட ஆட்சியராக, காவல்துறை உயர் அதிகாரியாக, வெளிநாட்டுத் தூதுவராக, இன்னபிற இந்திய
அரசின் உயர் அதிகாரிகளாகப் பணி நியமனம் பெறலாம்.
இதற்கான முதனிலைத் தேர்வு June 27, 2021 இல் நடைபெற
இருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் போன்ற முக்கிய நகரங்களில்
தேர்வு மையங்கள் அமையும்.
இத்தேர்வுக்கு எந்தத் துறையில் இளநிலை பட்டம் பெற்ற
எவரும் விண்ணப்பிக்க முடியும். இளநிலை பட்டப்படிப்பில் மூன்றாமாண்டு பயின்று கொண்டிருப்போரும்
விண்ணப்பிக்க முடியும்.
பொது பிரிவினருக்கான வயது வரம்பு 32. ஒபிசி பிரிவினருக்கான
வயது வரம்பு 35. எஸ்ஸி, எஸ்டி பிரிவினருக்கான வயது வரம்பு 37. மாற்றுத் திறனாளிகளுக்கான
வயது வரம்பு 42.
பயனுள்ள இத்தகவலைப் பலருக்கு பகிர்ந்து உதவவும்.
மேலும் இது குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment