ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் நீங்களே இணைக்கலாம்!
ஆதார் எண்ணையும்
பான் எண்ணையும் நீங்களே வெகு சுலபாக இணைக்க இணைப்பில் உள்ள வருமான வரியின் இணையதள முகவரிக்குச்
சென்று தோன்றும் திரையில்
Ø முதலில் பான் எண்ணை பான் அட்டையில் உள்ளது படி தட்டச்சு
செய்து,
Ø அடுத்ததாக ஆதார் எண்ணைத் தட்டச்சு செய்து,
Ø அடுத்ததாகத் தங்கள் பெயரை ஆதார் அட்டையில் உள்ளபடி
தட்டச்சு செய்து (தங்கள் ஆதார் அட்டையில் பிறந்த வருடம் மட்டும் இருக்குமானால் அது
குறித்த கட்டத்தில் சரி குறி தோன்றும் வகையில் சொடுக்க வேண்டும்)
Ø அதற்கடுத்து I agree to validate my aadhaar details
wih UIDAI என்பதற்கு முன்னுள்ள சிறு கட்டத்தைச் சரி குறி தோன்றும் வகையில் சொடுக்கி,
Ø தோன்றும் Captcha Code ஐ அதற்குரிய கட்டத்தில் தட்டச்சு
செய்து
Ø Link Aadhaar என்பதைச் சொடுக்கினால்
தங்கள் ஆதார் எண்ணும் பான் எண்ணும் இணைக்கப்பட்டு விடும். தாங்கள் ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைப்பதற்கான இணைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html
No comments:
Post a Comment