Monday, 22 March 2021

தேர்தல் பணிக்கான குறிப்புகள்

தேர்தல் பணிக்கான குறிப்புகள்

PRO – பணிகள்

1)      PRO dairy

2)      Form17C

3)      16 points Observer Report  Sheet.

4)      Visiter Sheet.

5)      Pledge Commencement of Poll and After Close the Poll.

6)      Mock poll certificate மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக PRO பூர்த்தி செய்ய வேண்டும்.  

PO 1 - பணிகள்

1)      Elector ஐ Identify செய்தல் வேண்டும்.

2)      Marked copy of elecoral roll இல் ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால்  வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும் 3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்             

PO 2 - பணிகள்

1)      17-A register இல் வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து அடுத்த கட்டத்தில் Epic என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்.

2)      வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்

3)      Voter slip இல் வரிசை எண்ணை குறித்து, வாக்காளரின் இடது கை  ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். அதன் பின் Voter slip ஐ வாக்காளரிடம் கொடுக்க வேண்டும்.      

PO 3 பணிகள்

 வாக்காளர் கொண்டுவரும் Voter slip ஐப் பெற்றுக்கொண்டு Control unit இல் உள்ள Ballot பட்டனை அழுத்தி வாக்காளர் வாக்களித்து முடித்ததை பீப் சத்தம் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் சில பொதுவான அறிய வேண்டிய குறிப்புகள்

1)      49-0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின்  பெயருக்கு  நேரில் உள்ள Remarks காலத்தில் 49-0 என்று குறிப்பிட வேண்டும்.   Refused the Vote என்று எழுத வேண்டும்.             

2)      49-M என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before  enterd the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க PRO அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register இல் வாக்காளர் கையொப்பத்தை அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.

3)      49 MA என்றால் வாக்காளர்வாக்களித்தபின் அந்த வாக்காளர் நான் வாக்களித்த Symbol க்குப் பதிலாக VVPAT இல் வேறு ஒரு Symbol பதிவாகிறது என்று  தெரிவித்தால் இந்நேர்வில் PRO அந்த வாக்காளரிடம் “இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை நீங்கள் மட்டுமே  தெரிவிக்கிறீர்கள். நான் உங்களுக்கு மறுபடியும் Testing vote வழங்குகிறேன். அதற்கு முன்பு நீங்க தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.” என்று முறையாக எச்சரித்து உள்ளே இருக்கும் Polling agent மற்றும்  வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தவரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்க செய்யவேண்டும் இந்நேர்வில் 17-A register இல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டு. Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிட வேண்டும். இதற்கு முன்பாக PRO 49-MA படிவத்தில் அவருடைய பெயர், த/பெ., மற்றும் Part no, Serial No, Serial No in 17 A register of voters போன்றவற்றைக் குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும். மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது நிருபணம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக. காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்

4)      மேலும் Tendered Votes (ஆய்வுக்குரிய வாக்குகள்), Challenged Votes (எதிர்க்கப்பட்ட வாக்குகள்), Test Votes, Proxy Votes போன்ற நிகழ்வுகள் வாக்குச்சாவடியில் அரிது எனினும் அது குறித்தும் அறிந்திருத்தல் அவசியம் ஆகும்.

இதனை PDF ஆகப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

No comments:

Post a Comment