Monday, 31 October 2022
Sunday, 30 October 2022
Thursday, 27 October 2022
An app that helps you make videos on your phone
An app that helps you make
videos on your phone
You can make a movie-like
video using your mobile phone. There are many apps for this. Among them Inshot
app is simple and useful for you.
You can download this app
by typing Inshot
video editor in PLAY STORE.
Or use the link below.
https://play.google.com/store/apps/details?id=com.camerasideas.instashot
Try it out. This app will
be useful for you. Sharing your comments will be a good idea to many.
*****
அலைபேசியில் காணொளிகள் தயாரிக்க உதவும் செயலி
அலைபேசியில் காணொளிகள் தயாரிக்க உதவும் செயலி
நீங்கள் பயன்படுத்தும் அலைபேசியைப்
பயன்படுத்தித் திரைப்படம் போன்ற காணொளியை நீங்கள் தயாரித்து விட முடியும். இதற்கென்று
பல செயலிகள் உள்ளன. அவற்றுள் Inshot எனும் செயலி எளிமையாகவும் உங்களுக்குப் பயனுள்ளதாகவும்
இருக்கும்.
இந்தச் செயலியை நீங்கள்
PLAY STORE இல் Inshot video editor என தட்டச்சு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அல்லது கீழே உள்ள இணைப்பைப்
பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.camerasideas.instashot
பயன்படுத்திப் பாருங்கள்.
இந்தச் செயலி உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால்
அது பலருக்கும் நல்ல ஆலோசனையாகவும் அமையும்.
*****
Wednesday, 26 October 2022
When other apps including TNSED are not working…
When other apps including
TNSED are not working…
When the apps are not
working due to the weakness of the network signals on your phone or lack of
continuous availability of the network signal, you can see the apps that are
not working when you use the DNS Changer app as well.
For example, when you can't
enter the TNSED app due to network signal problems, you can use the DNS Changer
app to complete the tasks you need to do in the TNSED app.
This is what you need to do
Type DNS Changer in PLAY STORE and download DNS Changer for
IPv4/IPv6. It is a completely free app.
Or use the link below.
https://play.google.com/store/apps/details?id=com.frostnerd.dnschanger
After downloading, enter it
and select Cloudfare
under Public DNS Providers and touch START. DNS Changer will now be activated.
Now go to which app you
want to run and try running it. All apps which were not running till now
including TNSED app will start running now.
After completing your tasks
in the app you can go to DNS Changer and STOP and make it inactive.
Again, whenever you want to
run your non-running app, you can START DNS Changer and run it.
Even if your internet
connection shows 'E' you can see your app running by START DNS
Changer.
If this useful information
is useful to you, please share it with others.
*****
TNSED உட்பட பிற செயலிகள் செயல்படாத போது…
TNSED உட்பட பிற செயலிகள் செயல்படாத போது…
உங்கள் அலைபேசியில் அலைவரிசை
சைகைகளின் பலவீனங்களாலோ, அலைவரிசைத் தொடர்ந்து கிடைக்காமையாலோ செயலிகள் இயங்காத போது
அதற்குத் துணையாக DNS Changer என்ற செயலியைப் பயன்படுத்தும் போது இயங்காத செயலிகளையும்
இயங்குவதையும் காணலாம்.
உதாரணமாக TNSED செயலியில்
அலைவரிசைக் கோளாறுகளால் செயலியின் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்படும் போது நீங்கள்
DNS Changer செயலியைப் பயன்படுத்தி TNSED செயலியில் செய்ய வேண்டிய பணிகளை
அருமையாகச் செய்து முடிக்கலாம்.
இதற்கென நீங்கள் செய்ய வேண்டியது
PLAY STORE இல் DNS
Changer என தட்டச்சு செய்து DNS Changer for IPv4/IPv6 என்ற செயலியைப் பதிவிறக்கம்
செய்து கொள்ளுங்கள். இது முற்றிலும் இலவசமான செயலி.
அல்லது கீழே உள்ள இணைப்பைப்
பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.frostnerd.dnschanger
பதிவிறக்கம் செய்து கொண்ட
பின் அதன் உள் நுழைந்து Public DNS Porviders என்பதில் Cloudfare என்பதைத் தேர்ந்தெடுத்துக்
கொண்டு START என்பதைத் தொடுங்கள். DNS Changer ஆனது இப்போது Activate ஆகி விடும்.
இப்போது நீங்கள் எந்தச் செயலியை
இயக்க வேண்டுமோ அந்தச் செயலில் சென்று இயக்கிப் பாருங்கள். TNSED செயலி உட்பட இதுவரை
இயங்காத அத்தனைச் செயலிகளும் இனி இயங்கத் தொடங்கி விடும்.
செயலியில் உங்கள் பணிகள்
முடிந்த பின்பு நீங்கள் DNS Changer இல் சென்று STOP செய்து அதை Inactive செய்து கொள்ளலாம்.
மீண்டும் நீங்கள் எப்போது
இயங்காத உங்கள் செயலியை இயங்க வைக்க வேண்டுமோ அப்போது DNS Changer ஐ START செய்து கொண்டு இயக்கலாம்.
உங்கள் இணைய இணைப்பு ‘E’
காட்டினாலும் DNS Changer ஐ START செய்து கொள்வதன் மூலம் உங்கள்
செயலி இயங்குவதை நீங்கள் காணலாம்.
பயனுள்ள இந்தத் தகவல் உங்களுக்குப்
பயன்பட்டது என்றால் அனைவருக்கும் பயன்பட பகிருமாறு வேண்டுகிறோம்.
*****
Tuesday, 25 October 2022
PINDICS ஐ நிரப்ப உதவும் செயல்திறன் நிலைகள் குறித்த அட்டவணை
PINDICS ஐ நிரப்ப உதவும் செயல்திறன் நிலைகள் குறித்த அட்டவணை
PINDICS ஐ நிரப்ப உதவும்
செயல்திறன் நிலைகள் குறித்த அட்டவணையைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
7வது கணக்கு - வட்டத்தின் சுற்றளவு - பாடக்குறிப்பு
வட்டத்தின் சுற்றளவு - பாடக்குறிப்பு
வகுப்பு
& பாடம் |
VII - கணக்கு |
அலகு |
2 |
இயல் |
அளவைகள் |
பாடத்தலைப்புகள் |
2.1. அறிமுகம் 2.2. வட்டம் 2.3. வட்டத்தின் சுற்றளவு |
கற்கும்
முறை |
Active Learning Methodology (ALM) |
கற்றல் விளைவுகள் :
718. ஓரலகு சதுரங்கள், புள்ளி கட்டத்தாள் / வரைபடத்தாளைப் பயன்படுத்தி மூடிய வடிவங்களின்
தோராய பரப்பளவைக் கண்டறிதல்.
719. ஒரு சதுரம் மற்றும் ஒரு செவ்வகத்தின் மூடிய பகுதியின் பரப்பளவைக் கணக்கிடுதல்.
1. அறிமுகம் :
ஆர்மூட்டல் |
நினைவு கூர்தல் |
மேலாய்வு |
வட்ட வடிவமான பொருட்கள் குறித்துக்
கேட்டறிதல். |
அடிப்படை வடிவியல் உருவங்கள் |
பக்கம் 22 முதல் லிருந்து
30 வரை |
2. புரிதல் :
அ) கருத்துச்
செயல்பாடு :
வெவ்வேறு அளவுள்ள ஐந்து வட்டங்கள்
வரைந்து அவற்றின் ஆரம், விட்டம், சுற்றளவு உள்ளிட்ட அளவுகளை அளந்து கண்டறிந்து அதன்
மூலமாக சுற்றளவு / விட்டத்திற்கான மதிப்பு
ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள் |
இ) மாணவர் செய்யும் கணக்குகள் |
1) 14 செ.மீ. ஆர அளவுள்ள வட்டத்தின் சுற்றளவு காண்க. 2) 28 செ.மீ. விட்ட அளவுள்ள வட்டத்தின் சுற்றளவு காண்க. |
1) 56 மீ விட்டமுள்ள வட்டத்தின் சுற்றளவு காண்க. 2) 28 மி.மீ. ஆர அளவுள்ள வட்டத்தின் சுற்றளவு காண்க. |
3. குழுவேலை :
ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள் |
இ) மாணவர் செய்யும் கணக்குகள் |
1760 செ.மீ. சுற்றளவுள்ள வட்டத்தின்
ஆரம் காண்க. |
ஒரு மாட்டுவண்டிச் சக்கரத்தின்
விட்டம் 1.4 மீ. அது 150 முறை சுழலும் போது கடக்கும் தொலைவைக் காண்க. |
4. வலுவூட்டுதல் :
பக்கம் 30 இல் உள்ள கொள்குறி
வகை வினாக்களுக்கு விடை காணச் செய்தல்.
5. மதிப்பீடு :
வகுப்பறை மதிப்பீடு |
வளரறி மதிப்பீடு |
1) 70 செ.மீ. ஆரமுள்ள
வட்டத்தின் சுற்றளவு காண்க. 2) 91 மி.மீ. விட்ட
அளவுள்ள வட்டத்தின் சுற்றளவு காண்க. 3) 2640 மீ சுற்றளவுள்ள
வட்டத்தின் ஆரம் காண்க. 4) 28 செ.மீ. விட்டமுள்ள
வட்டத்தின் ஆரம் காண்க. 5) 21 செ.மீ. ஆரமுள்ள
சக்கரம் 12 முறைகள் சுற்றினால் அது கடக்கும் தொலைவைக் காண்க. |
வட்ட வடிவம் இடம் பெறும் கொடிகளைக்
கண்டறிந்து பட்டியலிட்டு வருக. |
6. குறைதீர்க் கற்றல் :
பக்கம் 22 இல் உள்ள விரைவுத் துலங்கல்
குறியீடு.
7. தொடர்பணி :
பயிற்சி 2.1 இல் 3
பயிற்சி 1.4. இல் 6, 7, 8
*****
Monday, 24 October 2022
6 வது கணக்கு - மெட்ரிக் அளவைகள் - பாடக்குறிப்பு
மெட்ரிக்
அளவைகள் - பாடக்குறிப்பு
வகுப்பு
& பாடம் |
VI - கணக்கு |
அலகு |
2 |
இயல் |
அளவைகள் |
பாடத்தலைப்புகள் |
2.1. அறிமுகம் 2.2. மீள்பார்வை 2.3. மெட்ரிக் அளவைகளில் இனமாற்றம் 2.4. வெவ்வேறு அலகுகளுடைய அளவுகளின் அடிப்படைச்
செயல்கள் |
கற்கும்
முறை |
Active Learning Methodology (ALM) |
கற்றல் விளைவுகள் :
604. பணம், நீளம், வெப்பநிலை போன்றவை பயன்படும் பல்வேறு சூழல்களில் பின்னங்கள் மற்றும்
தசம பின்னங்களைப் பயன்படுத்துதல்.
1. அறிமுகம் :
ஆர்மூட்டல் |
நினைவு கூர்தல் |
மேலாய்வு |
கரும்பலகையின் சுற்றளவை சாண், முழம் மற்றும் அளவுகோல்
கொண்டு அளந்து கண்டறிதல். |
மெட்ரிக் அளவைகள் |
பக்கம் 27 முதல்
35 வரை |
2. புரிதல் :
அ) கருத்துச்
செயல்பாடு :
மெட்ரிக் அளவைகளில் இனமாற்றத்தை அறியச் செய்தல்.
ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள் |
இ) மாணவர் செய்யும் கணக்குகள் |
1) 10 லி 5 மி.லி.
ஐ மி.லி. ஆக மாற்றுக. 2) 15 கி.மீ. ஐ மீ,
செ.மீ. மற்றும் மி.மீ. இல் மாற்றுக. |
1) 13000 மி.மீ. ஐ மீட்டராக மாற்றுக. 2) 12 கி.மீ. ஐ மீ, செ.மீ. மற்றும்
மி.மீ. இல் மாற்றுக. |
3. குழுவேலை :
ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள் |
இ) மாணவர் செய்யும் கணக்குகள் |
தேன்மொழியின் தற்போதைய உயரம்
1.25 மீ. ஒவ்வோர் ஆண்டும் அவள் 5 செ.மீ. வளருகிறார் என்றால் 6 ஆண்டுகளுக்குப் பிறகு
அவரின் உயரம் என்ன? |
கீதா 2 லி 250 மி.லி. கொள்ளளவு
கொண்ட தண்ணீர்க் குடுவையைக் கொண்டு வந்தாள். அதிலிருந்து அவளுடைய நண்பர்கள் 300 மி.லி.
தண்ணீர் குடித்து விட்டனர். குடுவையில் உள்ள மீதித் தண்ணீரின் அளவு எவ்வளவு? |
4. வலுவூட்டுதல் :
பக்கம் 35 இல் உள்ள கொள்குறி
வகை வினாக்களுக்கு விடை காணச் செய்தல்.
5. மதிப்பீடு :
வகுப்பறை மதிப்பீடு |
வளரறி மதிப்பீடு |
1) 9 மீ 4 செ.மீ. ஐ செ.மீ. ஆக மாற்றுக. 2) 50 கி.கி. ÷ 100 கி. 3) 8257 மி.லி. ஐ கி.லி. மற்று
லி. ஆக மாற்றுக. 4) 300 மி.கி. ஐ கிராமாக மாற்றுக. 5) 2 லி கொள்ளளவுள்ள சாடியில் தண்ணீர்
நிரப்ப 100 மி.லி. கொள்ளளவு உள்ள குவளைகளில் எத்தனை முறை தண்ணீர் ஊற்ற வேண்டும்? |
மெட்ரிக் அளவையில் அமைந்த நீட்டலளவு,
நிறுத்தலளவு, முகத்தலளவு அட்டவணையை எழுதி வருக. |
6. குறைதீர்க் கற்றல் :
பக்கம் 27 இல் உள்ள விரைவுத் துலங்கல்
குறியீடு.
7. தொடர்பணி :
பயிற்சி 2.1 இல் 9 முதல் 12 வரையுள்ள
கணக்குகள்.
*****