Monday, 9 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (10.02.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (10.02.2026)

இன்று தேசிய குடற்புழு நீக்க நாள்

1) கோலாலம்பூரியில் உள்ள மலேயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் ஆய்வு மையம் நிறுவப்பட உள்ளது.

2) ஒத்தி வைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் மார்ச் 15 ஆம் தேதி நடைபெற உள்ளன.

3) இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் 17 ஆம் தேதி நிகழ உள்ளது. இதை இந்தியாவில் காண இயலாது.

4) தூய்மைப் பணியாளர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

5) இராணிப்பேட்டையில் 9000 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

6) இந்தியப் பிரதமரின் மலேசியா பயணத்தை ஒட்டி இந்தியா – மலேசியா இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

வரலாற்றில் இன்று…

1) இன்று உலக பருப்பு வகை நாள்

2) நவீன தடுப்பு மருந்துகளின் தந்தை எனப்படும் ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் 1897இல் பிறந்த தினம் இன்று.

3) சதுரங்கப் போட்டியில் கணினியோடு போட்டியிட்டு 1996 இல் கேரி கேஸ்பரோவ் தோல்வியடைந்த நாள் இன்று.



Education & GK News

Today is National Deworming Day

1) A Thiruvalluvar Research Centre is to be established at the University of Malaya in Kuala Lumpur.

2) The postponed TNPSC Group 2 exams are scheduled to be held on March 15th.

3) The first solar eclipse of this year is to occur on the 17th. It will not be visible in India.

4) Chief Minister M.K. Stalin launched the expanded breakfast scheme for sanitation workers.

5) Chief Minister M.K. Stalin inaugurated the Tata Motors factory established in Ranipet with an investment of 9000 crores.

6) 11 agreements have been signed between India and Malaysia following the Indian Prime Minister's visit to Malaysia.

Today in History…

1) Today is World Pulses Day.

2) Today is the birth anniversary of John Franklin Enders, known as the father of modern vaccines, who was born in 1897.

3) Today is the day in 1996 when Garry Kasparov was defeated by a computer in a chess match.

No comments:

Post a Comment