Thursday, 5 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (06.02.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (06.02.2026)

1) நாடு முழுவதும் 18,727 அரசுப் பள்ளிகள் போதிய மாணவர்கள் இன்றி மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2) ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற 933 சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி உள்ளது.

3) சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

4) தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டது.

5) சென்னை, கலைவாணர் அரங்கில் புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

6) தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் ஏற்பாடு குறித்து பார்வையிட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார்.

7) கூட்டுறவு டாக்சி சேவையான பாரத் டாக்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

8) மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி கலைக்கப்பட்டு, மணிப்பூர் முதல்வராக யும்நாம் கெம்சந்த் பதவியேற்றார்.

9) சென்னை, பெரம்பூரில் உள்ள ஐசிஎப் 80000 ஆவது ரயில் பெட்டியை உருவாக்கிச் சாதனைப் படைத்துள்ளது.

10) தங்கம் விலை குறைந்து சவரனுக்கு 115000க்குக் கீழ் நிலை கொண்டது.

வரலாற்றில் இன்று

1) 1819 இல் சர் ஸ்டாம்போர்டு ராபிள்ஸ் என்வரால் ஒரு வர்த்தக மையமாகச் சிங்கப்பூர் நிறுவப்பட்ட தினம் இன்று.

2) எல்லை காந்தி எனப்படும் கான் அப்துல் கபார் கான் 1890 இல் பிறந்த தினம் இன்று.

3) அமெரிக்காவின் 40 ஆவது அதிபரான ரொனால்ட் ரீகன் 1911 இல் பிறந்த தினம் இன்று.

Education & GK News

1) The Central Government has informed Parliament that 18,727 government schools across the country have been closed due to insufficient students.

2) The UPSC has released a notification for 933 civil service positions, including IAS and IPS. The application process has begun.

3) A cabinet meeting was held at the Chennai Secretariat under the chairmanship of Tamil Nadu Chief Minister M.K. Stalin.

4) The interim budget was discussed at the Tamil Nadu cabinet meeting.

5) Tamil Nadu Chief Minister M.K. Stalin unveiled the renovated Kalaivanar N.S. Krishnan statue at the Kalaivanar Arangam in Chennai.

6) Chief Election Commissioner Gyanesh Kumar will visit Tamil Nadu on February 12th and 13th to review the arrangements for the Tamil Nadu Assembly elections.

7) Union Home Minister Amit Shah launched Bharat Taxi, a cooperative taxi service.

8) President's rule in Manipur was lifted, and Yumkham Khemchand was sworn in as the Chief Minister of Manipur.

9) ICF in Perambur, Chennai, has created a record by manufacturing its 80,000th railway coach.

10) Gold prices have fallen and stabilized below Rs. 115,000 per sovereign.

Today in History

1) Today is the day in 1819 when Singapore was founded as a trading center by Sir Stamford Raffles.

2) Today is the birth anniversary of Khan Abdul Ghaffar Khan, known as the Frontier Gandhi, who was born in 1890.

3) Today is the birth anniversary of Ronald Reagan, the 40th President of the United States, who was born in 1911.

No comments:

Post a Comment