Saturday, 7 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.02.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.02.2026)

1) நவம்பர் 2025 இல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், எடகீழையூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் இரா. தமிழரசன் மாவட்ட அளவில் முதல் இடத்தையும், மாநில அளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்துச் சாதனை படைத்துள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆசிரியர் தகுதித் தேர்வில் மாநில அளவில் சாதித்திருப்பது கல்வித்துறையைச் சார்ந்தோரைப் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது.

2) தமிழகத்தில் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையத்திற்கான அடிக்கலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டினார்.

3) பிப்ரவரி 17 இல் தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

4) பிரதமர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக மலேசியா சென்றடைந்தார்.

5) சென்னையில் கண்டறியப்பட்ட பறவைக் காய்ச்சலின் எதிரொலியாக நாமக்கல் கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்புப் பணிகளும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

6) சிறு குறு நிறுவனங்களுக்குப் பிணையில்லாமல் வழங்கும் கடனை 20 லட்ச ரூபாய உயர்த்தியது இந்திய ரிசர்வ் வங்கி.

7) பிப்ரவரி 10 வரை தமிழகத்தின் சில மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8) 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் 6 ஆவது முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

வரலாற்றில் இன்று…

1) உலகின் முதல் மின்னணு பங்குச் சந்தையான அமெரிக்காவின் நாஸ்டாக் 1971 இல் இன்று தன் வர்த்தகத்தைத் தொடங்கியது.

2) டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவ் 1994 இல் 432 எனும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திச் சாதனை படைத்தார் இன்று.

3) அறிவியல் புனைகதைகளின் தந்தையான சூல்ஸ் வெர்னே 1828 இல் பிறந்த தினம் இன்று.



Education & GK News

1) In the Teacher Eligibility Test held in November 2025, R. Tamilarasan, a teacher from Edakeezhaiyur Panchayat Union Primary School in Needamangalam block, Thiruvarur district, has achieved a remarkable feat by securing the first rank at the district level and the third rank at the state level. The achievement of a government school teacher at the state level in the Teacher Eligibility Test has filled those in the education sector with pride.

2) Chief Minister M.K. Stalin laid the foundation stone for Tamil Nadu's first sea turtle conservation center.

3) Tamil Nadu's interim budget will be presented on February 17.

4) The Prime Minister arrived in Malaysia for a two-day official visit.

5) Following the detection of bird flu in Chennai, disease prevention measures and surveillance have been intensified in poultry farms in Namakkal.

6) The Reserve Bank of India has increased the limit for collateral-free loans to micro and small enterprises to Rs. 20 lakhs.

7) The Meteorological Department has stated that fog may prevail in some districts of Tamil Nadu until February 10.

8) The Indian team won the Under-19 Cricket World Cup for the 6th time.

On this day in history…

1) NASDAQ, the world's first electronic stock exchange, began trading on this day in 1971.

2) On this day in 1994, Kapil Dev set a record for the most wickets taken in Test cricket with 432 wickets.

3) This is the birth anniversary of Jules Verne, the father of science fiction, who was born in 1828.

No comments:

Post a Comment