கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.02.2026
1) இஸ்ரோ
(ISRO) நடத்தும் இளம் விஞ்ஞானி திட்டத்திற்கான (யுவிகா) விண்ணப்பித்தல் நடைமுறைகள்
பிப்ரவரி 27 முதல் தொடங்கவுள்ளன.
2) ஒன்பதாம்
வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இந்த 2 வார கால உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் மே
11 முதல் மே 22 வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பிப்ரவரி 27 முதல்
தொடங்குகின்றன.
3) மத்திய
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆசிரியர்களுக்கான Teacher App 2.0 என்ற AI தொழில்நுட்ப
செயலியை அறிமுகப்படுத்தினார். இது NEP 2020 கொள்கையின் கீழ் பாடத்திட்டங்களை எளிமையாக
விளக்கும்.
4) கேரளா
மாநிலத்தின் பெயரைக் கேரளம் என மாற்றுவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இனி கேரளா கேரளம் என அழைக்கப்படும்.
5) இந்தியாவைச்
சேர்ந்த Sarvam AI நிறுவனம், இந்திய மொழிகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய
AI மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
6) வடக்கு
மற்றும் மேற்கு இந்தியாவில் வெப்ப அலை வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இயல்பான வெப்பநிலை 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்.
7) நாசாவின்
கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் மர்மமான சிலந்தி வலை போன்ற அமைப்புகளைப்
படம்பிடித்துள்ளது. இது அங்கு ஒருகாலத்தில் நீர் இருந்ததற்கான மற்றும் உயிரினங்கள்
வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
வரலாற்றில் இன்று…
1) 2012
இல் போலியோ இல்லாத நாடு என இந்தியாவை உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்த நாள் இன்று.
2)
1964 இல் முகமது அலி முதல்முறையாக உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற நாள் இன்று.
3)
2001 இல் மாபெரும் கிரிக்கெட் வீரர் சர் டான் பிராட்மேன் ஆஸ்திரேலியாவில் மறைந்த தினம்
இன்று.
Education & GK News
1) The application process for ISRO's Young Scientist
Programme (YUVIKA) will begin from February 27.
2) The two week boarding and lodging camp for class 9
students of YUVIKA will be held from May 11 to May 22. Online applications for
this will begin from February 27.
3) Union Education Minister Dharmendra Pradhan launched
the Teacher App 2.0, an AI technology app for teachers. It will explain the
syllabus under the NEP 2020 policy in a simple manner.
4) The central government has given its approval to
change the name of the state of Kerala to Keralam. From now on, Kerala will be
called Keralam.
5) India-based Sarvam AI has launched the largest AI
models specially developed for Indian languages.
6) The Meteorological Department has said that a heat
wave is likely to hit North and West India. Due to this, the temperature may
increase by 5 to 8 degrees Celsius.
7) NASA's Curiosity rover has captured images of
mysterious spider web-like structures on Mars, reaffirming the possibility that
there was once water and life there.
Today in
history…
1) The World Health Organization (WHO) declared India
polio-free in 2012.
2) Muhammad Ali won the world heavyweight championship
for the first time in 1964.
3) Cricket legend Sir Don Bradman passed away in
Australia in 2001.



No comments:
Post a Comment