வியோமித்ரா – விண்வெளியில் ஓர் இந்திய மேனகை!
வியோமித்ரா
– இதென்ன ஏதோ மாத்திரையின் பெயர் போல இருக்கிறது என யோசிக்கிறீர்களா? இது மாத்திரையல்ல.
சிட்டி ரோபோவின் சகோதரி என்று சொல்லலாம். இவள் ஒரு பெண்.
ககன்யான்
விண்கலத்தில் வேலை செய்யப் போகும் பெண் ரோபோதான் இந்த வியோமித்ரா.
இவள்
ஒரு ஹ்யூமனாய்டு. அதாவது, நம்மைப் போலவே உருவம் கொண்ட, ஆனால் ரத்தமும் சதையும் இல்லாத
ஒரு இயந்திரப் பெண்.
வியோம்
என்றால் விண்வெளி, மித்ரா என்றால் நண்பன்.
இஸ்ரோ
இதைச் செய்திருக்கிறது. 2026 இல் மிகப்பெரிய சயின்ஸ் ஃபிக்ஷன் கதை நிஜமாகப்போகிறகிறது.
ககன்யான்
விண்கலத்தில் மனிதர்கள் ஏறுவதற்கு முன்னால், ரிஸ்க் எடுக்கப் போவது இந்த அரை உடல் ரோபோதான்.
ஆம்,
இவளுக்கு இடுப்புக்குக் கீழே கால்கள் கிடையாது. அது ஏன்? ஏனிந்த விசித்திரம்? விண்வெளியில்
எடை கிடையாது, அப்புறம் எதுக்குக் கால்கள்? விண்வெளியில் மிதந்து கொண்டே வேலை செய்ய
இடுப்புக்கு மேல் உள்ள பாகங்களே போதும்.
விண்கலத்தின்
இருக்கையில் அமர்ந்து கொண்டு, சுவிட்சுகளை இயக்குவதற்கும், கேபினில் இருக்கும் அழுத்தத்தை
அளப்பதற்கும் கால்கள் எதற்கு? அங்கு வியோமித்ரா ஓட்டப் போட்டியிலா கலந்து கொள்ளப் போகிறாள்?
ஆகவே கால்கள் இல்லை. இது விண்கலத்தின் எடையைக் குறைக்கவும், அதிகப்படியான கருவிகளை
வைக்கவும் இஸ்ரோ செய்திருக்கும் மேஜிக்.
இவளுடைய
புத்திசாலித்தனம் மூளையில் அல்ல, சிலிக்கான் சில்லுகளில் இருக்கிறது. வியோமித்ரா, அங்கே
விண்வெளியில் ஆக்சிஜன் அளவு என்ன? என்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கேட்டால், கண்கள்
சிமிட்டி, எல்லாம் நார்மல் அல்லது கொஞ்சம் கூட ஆக்ஸிஜன் இல்லை அல்லது ஆக்ஸிஜன் குறைகிறது
இப்படி அந்தச் சூழ்நிலைக்கேற்ற ஒரு பதிலைச் சொல்லும்.
வியோமித்ராவுக்கு
சில உணர்வுகள் கூட உண்டு. விண்கலம் அதிவேகமாக மேலே போகும்போது ஏற்படும் நடுக்கத்தை
உணர்ந்து டேட்டாவாக மாற்றி பூமிக்கு அனுப்புவாள். அது எப்படி என்றால், விண்கலம் பூமியின்
வளிமண்டலத்தைத் தாண்டிச் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் புவிஈர்ப்பு விசை
மாற்றங்களை இவளது உடலில் உள்ள சென்சார்கள் துல்லியமாகக் கணக்கிடும். அழுத்தம் மற்றும்
ஆக்சிஜன் அளவு குறைந்தால் உடனடியாகத் தகவல் சொல்லும். விண்கலத்திற்குள் வெப்பம் அதிகமானால்
எச்சரிக்கை மணி அடிக்கும்.
அப்புறம்
இவளுடைய வேறு வேலைகள் என்னவென்றால்…
முன்பே
சொன்னபடி வியோமித்ரா என்பது வெறும் பொம்மை அல்ல, அது ஓர் இயந்திரத் தோழி. விண்வெளியில்
மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்கூட்டியே சந்திப்பதுதான் இவளுடைய வேலை.
ககன்யான்
விண்கலத்தின் உள்ளே ஏகப்பட்ட பொத்தான்கள், இணைப்புகள் மற்றும் திரைகள் இருக்கும். வியோமித்ரா
தனது கைகளால் இந்தச் சுவிட்சுகளை இயக்க முடியும். தரைக்கட்டுப்பாட்டு மையத்திலிருந்து
வரும் கட்டளைகளை ஏற்று, விண்கலத்தின் பாகங்களைச் சரிபார்ப்பதும் இவள் வேலை.
வியோமித்ராவுக்குப்
பேசத் தெரியும். விண்வெளி வீரர்கள் எதிர்காலத்தில் அவளிடம் பேசும்போது, அவர்களின் குரலைப்
புரிந்து கொண்டு பதில் சொல்லும் ஆற்றல் இவளுக்கு
உண்டு. எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டால், சென்சார் தரவுகளை ஆய்வு செய்துவிட்டு
ஆமாம் என்றோ இல்லை என்றோ பதில் சொல்லும்.
சுருக்கமாகச்
சொன்னால், வியோமித்ரா ஒரு ஸ்பேஸ் டெஸ்ட் டிரைவர். இவள் தரும் தரவுகளை வைத்துதான், அடுத்த
முறை இந்திய வீரர்கள் விண்வெளிக்குச் செல்லும் போது அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு
வசதிகள் உறுதி செய்யப்படும்.
விண்வெளியில்
புவிஈர்ப்பு விசை இல்லாத நிலையில், ஒரு சாதாரணத் திரவம் கூடக் கோள வடிவில் மிதக்கும்.
அந்தச் சூழலில் ஒரு ரோபோவின் மோட்டார் சரியாக இயங்குமா என்பது நம் இஸ்ரோ சயின்டிஸ்ட்டுகளுக்கு
இருக்கும் முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு வியோமித்ரா சரியாக இயங்கி பதில் தந்து
விட்டால், அடுத்த ஆண்டு மனிதர்கள் விண்வெளிக்குப் போவது உறுதி.
ஆக,
இயந்திரப் பெண்ணே, விண்வெளிக்குப் போய் வந்து இந்தியர்களை அழைத்துச் செல்ல சீக்கிரமே
நல்ல சேதியைக் கூறுவாயாக!
*****

No comments:
Post a Comment