Friday, 19 June 2020

எதனால் எது கெடும்?

எதனால் எது கெடும்?

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.

16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.

46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.


Wednesday, 17 June 2020

உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள்!

கதை சொல்லும் சேதி :
உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள்!

            உங்கள் கடமை எதுவோ அதைக் கண்ணும் கருத்துமாகச் செய்யுங்கள். அதிலிருந்து விலகுவதோ, வெகுமதிக்கு ஆசைப்படுவதோ உங்களைத் தகுதியற்றவர்களாக ஆக்கி விடும். இதை விளக்கும்படியான ஒரு கதை.
            ஓர் இரவு நேரக் காவலாளிக்கு கனவு வந்தது. கனவு வந்ததது என்றால் கடமையிலிருந்து விலகி விட்டார் என்றுதானே அர்த்தம்.
            அவரது கனவில் அவரது முதலாளி செல்லும் விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறி விடுகிறது. கனவிலிருந்து விழித்த காவலாளி தான் கடமையிலிருந்து விலகி தூங்கியதைக் கவனத்தில் கொள்ளவில்லை.
            அந்தக் கனவு பலிக்குமானால், அது குறித்து முதலாளியிடம் சொல்லி அவரைக் காப்பாற்றி விட்டால் வெகுமதி கிடைக்கும் என ஆசைப்பட்டார். அந்த ஆசை வந்ததும் முதலாளியிடம் சென்ற இரவுக் காவலாளி தன்னுடைய கனவைச் சொன்னார்.
            முதலாளியும் எதற்கும் இருக்கட்டுமே என்று அன்றை விமானப் பயணத்தை ரத்து செய்தார். இரவுக்காவலாளி சொன்னபடியே அவர் பயணம் செய்யவிருந்த விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது.
            முதலாளி உடனடியாக இரவுக்காவலாளியை அழைத்தார். வெகுமதி கொடுக்க அல்ல, வேலையிலிருந்து உடனடியாகத் தூக்க. அப்போது அந்த முதலாளி சொன்னார், "இரவுக் காவலாளியான நீ வேலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தால் என் முதலும் மூலதனமும் என்னாவது?"என்று.
            ஆகவேத்தான் இப்பிடிச் சொல்லப்படுகிறது, "உங்கள் கடமையிலிருந்து விலகுவதோ, வெகுமதிக்கு ஆசைப்படுவதோ உங்களைத் தகுதியற்றவர்களாக்கி விடும்!" என்று.
*****

Tuesday, 16 June 2020

அலுவலகக் கடிதங்களின் சுருக்கங்களின் விளக்கம்

அலுவலகக் கடிதங்களின் சுருக்கங்களின் விளக்கம்
அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண், மூ.மு.எண் என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.
அதன் விளக்கம் :

ந. க. எண்
நடப்புக் கடித எண்
ஓ. மு. எண்
ஓராண்டு முடிவு எண்
மூ. மு. எண்
மூன்றாண்டு முடிவு எண்
நி. மு. எண்
நிரந்தர முடிவு எண்
ப. மு. எண்
பத்தாண்டு முடிவு எண்
தொ. மு. எண்
தொகுப்பு முடிவு எண்
ப. வெ. எண்
பருவ வெளியீடு எண்
நே. மு. எண்
நேர்முகக் கடித எண்

மேற்கண்ட சுருக்கங்களில் ந.க.எண்  (நடப்புக் கணக்கு எண்) மட்டுமே அதிகப் பயன்பாட்டில் உள்ளது ஆகும்.
நேர்முகக் கடிதம் என்பது கீழ்மட்ட அலுவலருக்கு, மேல்மட்ட அதிகாரி எழுதும் கடிதம் ஆகும். இது நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை கீழ்மட்ட அலுவலர் விரைந்து  அளிக்க  வேண்டும்.
மேற்கண்டவாறு சுருக்கம் மற்றும் சுருக்க எண், நாள் இல்லாது வரும் கடிதங்களை அதிகாரப்பூர்வ கடிதங்களாக கருத இயலாது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


Monday, 15 June 2020

எச்சரிக்கைகளைப் பொருட்படுத்துங்கள்!

கதை சொல்லும் சேதி :
எச்சரிக்கைகளைப் பொருட்படுத்துங்கள்!

            தேவையான அறிவுரைகளை, சரியான எச்சரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்காதவர்கள் தங்கள் செயலால் தங்களது அழிவைத் தாங்களே தேடிக் கொள்கிறார்கள்.
            விபரீத ஆசைகள் விபத்தில் போய் முடிகிறது.
            அசட்டுப்புத்திக்காரர்கள் தாங்களே வலையில் போய் சிக்கிக் கொள்கிறார்கள்.
இதெல்லாம் பொதுவான நியதிகள். இந்த நியதிகளை விளக்கும்படியான கதை ஒன்று.
            ஓர் ஊரில் குறும்புக்கார அசட்டுப்புத்திக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்குக் குதிரை ஒன்றைப் பார்த்த போது, அதன் வாலில் இருந்து முடிகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தெறிய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவன் குதிரையின் வாலை தொட்ட போது குதிரைக்காரன் எச்சரித்தான், குதிரை ஓங்கி உதைத்தால் வாயில் ஒரு பல் கூட இருக்காது என. தேவையான அறிவுரையை, சரியான எச்சரிக்கையைக் குதிரைக்காரன் வழங்கி விட்டான். அசட்டுப்புத்திகாரன் அதைப் பொருட்படுத்தவில்லை.
            குதிரையின் வாலில் இருந்து ஒரு முடியைப் பிடித்து இழுத்தான் அசட்டுப்புத்திக்காரன். குதிரை வலி தாங்க முடியாமல் ஓங்கி உதைத்தில் அவன் வாயில் இருந்த பற்களில் முப்பத்திரண்டில் ஒன்று கூட தேறவில்லை. அவ்ன பொக்கைவாயனாகி விட்டான். அதற்கு அந்த அசட்டுப்புத்திக்காரன் குதிரைக்காரனிடம் நட்டஈடு கேட்டான்.
            வேண்டுமென்றே, வீம்பாகச் சென்று உதைபட்டதற்கெல்லாம் நட்டஈடு கொடக்க முடியாது என்று கூறி விட்டான் குதிரைக்காரன். அசட்டுப்புத்திக்காரன் விடுவதாக இல்லை. இந்தப் பிரச்சனைப் பெரிதாக சண்டையாகி வழக்கு மன்றத்துக்குப் போனது.
            நீதிபதி குதிரைக்காரனை விசாரித்தார். ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டார். எந்தக் கேள்விக்கும் பதிலைச் சொல்லாமல் மெளனமாக நின்றான் குதிரைக்காரன். கடைசியாக நீதிபதி குதிரைக்காரனைப் பார்த்து, "எந்தக் கேள்விக்கும் பதிலைச் சொல்லாமல் நிற்கிறாயே, நீயென்ன ஊமையா?"என்று கேட்டார். அதற்கும் பதிலைச் சொல்லாமல் மெளனமாகக் குதிரைக்காரன் நிற்கவே அசட்டுப்புத்திகாரனுக்குக் கோவம் வந்து விட்டது. அவனால் சும்மா இருக்க முடியவில்லை.
            "குதிரையின் வாலைப் பிடித்து முடியைப் பிய்த்தால் குதிரை உதைக்கும்! பற்கள் ஒன்று கூட தேறாது என்று நீதானேடா சொன்னாய்! இப்போது ஊமையைப் போல ஏனடா நடிக்கிறாய்?"என்று அசட்டுப்புத்திக்காரன் குதிரைக்காரனைப் பார்த்துக் கத்தினான்.
            நீதிபதி நடந்ததைப் புரிந்து கொண்டார். குதிரைக்காரனை விடுவித்தார். அசட்டுபுத்திக்காரனைத் தண்டித்தார்.
            பேசுவதால் மட்டுமல்ல, சில நேரங்களில் மெளனத்தாலும் வெற்றியைக் காண முடியும் என்பதை விளக்குகிறது இந்தக் கதை. அது மட்டுமா,
            1. அறிவுரைகளுக்குக் காது கொடுங்கள்,
            2.  எச்சரிக்கைகளைப் பொருட்படுத்துங்கள்,
            3. நீங்களாகவே வாயைக் கொடுத்து அசட்டுத்தனமாக மாட்டிக் கொள்ளாதீர்கள்,
            4. விபரீத ஆசைகள் விபத்தில் போய் முடியும்,
            5. சரியான சேதிகளுக்குக் காது கொடுக்காதவர்கள் தாங்களாகவே மாட்டிக் கொள்வார்கள் என்பன போன்ற உன்னத சேதிகளையும் அல்லவா சொல்கிறது இந்தக் கதை!   
*****



Friday, 12 June 2020

அருந்தமிழ் மருத்துவம்

அருந்தமிழ் மருத்துவம்

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை


கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு  நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!


Friday, 5 June 2020

Literary Meaning of Indian States

This Pictures Shows You Literary Meaning of Indian States :



Thursday, 4 June 2020

காய்கறி விடுகதைகள் - 4

காய்கறி விடுகதைகள் - 4

வ.எண்
விடுகதை
விடை
1.
பறக்க முடியாத பச்சைக்கிளி. கொம்பிலே இருக்கும் குள்ளக்கிளி. அது என்ன?
மாங்காய்
2.
வெள்ளைக் கோட்டைக்குள் அண்ணன் தம்பி இரண்டு பேர். அது என்ன?
நிலக்கடலை
3.
இரண்டே தோலிலே முத்து வரும். அது என்ன?
பூண்டு
4.
சிவப்பு உடம்புகாரிக்குப் பச்சை குடுமி. அது என்ன?
தக்காளி
5.
நூறு கிளிக்கு ஒரே வாய். அது என்ன?
வாழைப்பூ