Monday, 8 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (09.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (09.12.2025)

1) மதுரையில் வீரமங்கை வேலுநாச்சியார் உயர்நிலைப் பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

2) கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை என முதல்வர் தெரிவித்துள்ளார்.

3) கொரோனாவுக்குப் பிறகு 4 மடங்கு இதய நாள தளர்ச்சி அதிகரித்துள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4) தங்கும் விடுதிகளில் எண்ம முறையில் (டிஜிட்டல் முறை) ஆதார் சரிபார்ப்பு நடைமுறைகள் விரைவில் அமலாக உள்ளன.

5) இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள விமான சேவை குளறுபடிகள் படிப்படியாகச் சீரடையத் தொடங்கியுள்ளன.

5) ரஷ்யா நேரடி அச்சுறுத்தல் நாடு இல்லை எனவும் இந்தியா கூட்டாளி நாடு எனவும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்புக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

6) தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Education & GK News

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated the Veeramangai Velunachiyar High Level Bridge in Madurai.

2) The Chief Minister has said that it is the duty of citizens to contribute to the Flag Day fund.

3) Medical studies have shown that the incidence of heart failure has increased 4 times after Corona.

4) Digital Aadhaar verification procedures in hotels are coming into effect soon.

5) The flight service disruptions at IndiGo Airlines have gradually started to improve.

5) The new US security policy has declared that Russia is not a direct threat country and India is an ally.

6) Moderate rain is likely in Tamil Nadu for the next six days.

Sunday, 7 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.12.2025)

1) மின்னணு துறையில் இந்தியாவின் தலைநகராகத் தமிழகம் மாறியுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2) தொடர் மழையால் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

3) தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி டிசம்பர் 11 இல் துவங்குகிறது.

4) தெற்காசியாவில் பெய்த கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1750 ஐக் கடந்தது.

5) கோவாவில் இரவு கேளிக்கை விடுதியில் எரிவாயு உருளை (சிலிண்டர்) வெடித்ததில் 25 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

6) இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் ரத்தாவதால் விமான கட்டணங்கள் ஆறு மடங்கு அதிகமாயுள்ளன.

7) வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா விரும்பும் வரை இந்தியாவில் தங்கியிருக்கலாம் என மத்திய அரசு அறிவுத்துள்ளது.

8) தமிழகத்தில் ஆறு நாட்களக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

9) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றது.








Education & GK News

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin has proudly stated that Tamil Nadu has become the capital of India in the electronics sector.

2) Dengue incidence has increased in Tamil Nadu due to continuous rains.

3) The work of checking electronic voting machines across Tamil Nadu will begin on December 11.

4) The death toll due to heavy rains in South Asia has crossed 1750.

5) 25 people were killed in a gas cylinder explosion at a nightclub in Goa. Many were seriously injured.

6) Airfares have increased six times due to cancellation of IndiGo flights.

7) Former Bangladesh Prime Minister Sheikh Hasina can stay in India as long as she wants, the Central Government has informed.

8) There is a possibility of moderate rain in Tamil Nadu for six days.

9) India won the one-day cricket match against South Africa.

Thursday, 4 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (05.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (05.12.2025)

1) தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 77.52 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் எனத் தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2) பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழம் சின்னம் முடக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

3) தூயமல்லி அரிசி, கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

4) புயல் வலுவிழந்ததால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை அளவு குறைந்தது.

5) இந்தியாவுக்கு வருகை தந்துள்ள விளாதிமிர் புதினுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

6) டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90.43 ஆகச் சரிவு கண்டது.

7) ஏ.வி.எம். சரவணன் வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 86.



Education & GK News

1) The Tamil Nadu Election Commission has said that 77.52 lakh voters may be removed from the electoral roll of Tamil Nadu.

2) The Election Commission has announced that the mango symbol of the Pattali Makkal Katchi has been blocked.

3) Geographical indication has been obtained for Thooyamalli rice and Kaundhapadi sugar.

4) The rainfall in Chennai and its surrounding districts has decreased as the cyclone has weakened.

5) Five-tier security has been provided to Vladimir Putin, who is visiting India.

6) The value of the Indian rupee against the dollar has fallen to 90.43.

7) A.V.M. Saravanan passed away due to old age. He was 86.

Wednesday, 3 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 04.12.2025 (வியாழன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 04.12.2025 (வியாழன்)

1) இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் 875 கோடி ரூபாயைத் தனியார் பள்ளிகளுக்குத் தமிழக அரசு விடுவித்தது.

2) தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

3) தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

4) 3631 மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

5) அலைபேசிகளில் சஞ்சார் சாந்தி செயலி நிறுவுவது கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

6) இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார்.


Education & General Knowledge News – 04.12.2025 (Thursday)

1) The Tamil Nadu government released Rs 875 crore to private schools under the Free Compulsory Education Scheme.

2) The Tamil Nadu Public Service Commission's 2026 schedule has been released.

3) Prime Minister Narendra Modi has expressed pride that the organic farming of Tamil Nadu farmers is amazing.

4) Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that 3631 differently-abled persons have been given power in local bodies.

5) The Central Government has announced that it is not mandatory to install the Sanchar Shanti app on mobile phones.

6) Russian President Vladimir Putin is arriving in India today on a two-day visit.

Tuesday, 2 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.12.2025)

1) வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வழவிழந்தது.

2) கனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

3) கனமழையின் காரணமாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4) சேலம், நாமக்கல், திருப்பூர், தேனி மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5) வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹேக்டேருக்கு 20000 ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6) கார்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது.

7) அடுத்து ஆண்டு ஏப்ரல் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் துவங்க உள்ளன.

Education & GK News

1) The cyclone in the Bay of Bengal has weakened into a depression.

2) Due to heavy rains, schools and colleges in Chennai, Tiruvallur and Kanchipuram districts have been declared holiday.

3) Due to heavy rains, schools in Chengalpattu, Kallakurichi, Villupuram and Cuddalore districts have been declared holiday.

4) Heavy rain warning has been issued for Salem, Namakkal, Tiruppur and Theni districts.

5) Rs. 20,000 per hectare as relief has been announced for crops affected by the northeast monsoon.

6) Maha Deepam is being lit in Tiruvannamalai today on the occasion of Karthigai Deepam festival.

7) Population census work is to begin from April next year.

Monday, 1 December 2025

2026 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் & வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

2026 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள்

& வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

2026 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களின் பட்டியலைக் கீழே காண்க.


கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.12.2025 (செவ்வாய்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.12.2025 (செவ்வாய்)

1) கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2) கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

3) கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

4) நேற்று அமளியுடன் தொடங்கிய மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

5) மிலியாய்டோசிஸ் எனும் எலிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க மழைநீரில் வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

6) திருப்பரங்குன்றம் மலை உச்சியிலும் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

7) இந்திய திறமைசாலிகளால் அமெரிக்கா அதிகம் பலனடைந்துள்ளதாக எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.







Education & General Knowledge News – 02.12.2025 (Tuesday)

1) Holiday has been declared for schools and colleges in four districts of Chennai, Tiruvallur, Kanchipuram and Chengalpattu due to heavy rain.

2) Anna University semester exams have been postponed in the districts where holiday has been declared due to heavy rain.

3) Chief Minister M.K. Stalin has ordered to provide relief to crops and livestock affected by heavy rain.

4) The Lok Sabha, which started with a ruckus yesterday, was adjourned for the whole day.

5) The Health Department has advised people to avoid walking barefoot in rainwater to prevent the spread of miliiasis, a rat fever.

6) The Madurai High Court bench has ordered the lighting of the Karthigai Deepam at the top of the Thiruparankundram hill as well.

7) Elon Musk has said that America has benefited a lot from Indian talents.