Friday, 28 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (29.11.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (29.11.2025)

1) டித்வா புயல் கரையை நெருங்கி வருவதால் சென்னை மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்களில் நான்காம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

2) டித்வா புயலை எதிர்கொள்ள அரசு இயந்திரம் தயார் நிலையில் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3) டித்வா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாகப் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4) டித்வா புயலால் ஏற்பட்ட கனமழையால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5) இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.

6) ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் டிசம்பர் 4 இல் இந்தியா வருகிறார்.


Education & GK News

1) Cyclone Warning Cage No. 4 has been raised at Chennai and Nagapattinam ports as Cyclone Titva approaches the coast.

2) Chief Minister M.K. Stalin has said that the government machinery is ready to face Cyclone Titva.

3) The Chief Minister has appealed to the public not to come out unnecessarily as a precautionary measure against Cyclone Titva.

4) The death toll in Sri Lanka due to heavy rains caused by Cyclone Titva has increased to 85. More than 50 thousand people have been affected.

5) The Indian economy has achieved 8.2 percent economic growth.

6) Russian President Vladimir Putin is coming to India on December 4.

Thursday, 27 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.11.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.11.2025)

1) வங்கக் கடலில் டித்வா புயல் உருவானது.

2) ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செலல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3) வட கடலோர மாவட்டங்களில் 45 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4) கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

5) முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகின.

6) புதிய பாரத எழுத்தறித் திட்டத் தேர்வுகள் டிசம்பர் 14 இல் நடைபெற உள்ளன.

7) சமூக ஊடகப் பதிவுகளை ஒழுங்குபடுத்த தன்னாட்சி அமைப்பு தேவை என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

8) தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் படிவங்களைப் (SIR) பதிவேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

9) டிசம்பர் 4க்குள் வாக்காளர் திருத்தப் படிவங்களை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10)  டிசம்பர் 9 இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது.

11) வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள் மீண்டும் புதிதாக படிவம் 6 மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Education & GK News

1) Cyclone Titva has formed in the Bay of Bengal.

2) Fishermen have been warned not to venture into the sea for five days.

3) The Meteorological Department has said that land winds of up to 45 kmph may blow in the northern coastal districts.

4) Schools in Rameswaram taluk of Ramanathapuram district have been declared holiday due to heavy rains.

5) Results of the examination for the post of post-graduate teacher have been released online.

6) New Bharat Literacy Scheme examinations are to be held on December 14.

7) The Supreme Court has said that an autonomous body is needed to regulate social media posts.

8) The work of uploading voter correction (SIR) forms is in full swing in Tamil Nadu.

9) Voter correction forms have been advised to be submitted by December 4.

10) Draft voter list to be released on December 9.

11) It is noteworthy that voters whose names are not in the draft voters' list will have to apply again using Form 6.

Wednesday, 26 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் -27.11.2025 (வியாழன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் -27.11.2025 (வியாழன்)

1) தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.

2) சென்னை, நாகப்பட்டினம் துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

3) இராமேஸ்வரம் மற்றும் பாம்பனில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

4) உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளரும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

5) சென்யார் புயல் இந்தோனேசியாவில் கரையைக் கடந்தது.

6) தனியார் வாகனங்களில் பயணிப்பதற்கான பாரத் டாக்சி என்ற செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

7) மழையால் வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை கிலோ 100 ரூபாயை எட்டியது. முருங்கைக் காயின் விலை கிலோ 400 ரூபாயை எட்டியது.




Education & General Knowledge News -27.11.2025 (Thursday)

1) A new low-pressure area has formed in the southwest Bay of Bengal.

2) Cyclone Warning Cage Number One has been hoisted at Chennai and Nagapattinam ports.

3) Cyclone Warning Cage Number Two has been hoisted at Rameswaram and Pamban.

4) President Draupadi Murmu has expressed confidence that India will become the third largest economy in the world.

5) Cyclone Senyar has crossed the coast in Indonesia.

6) An app called Bharat Taxi for traveling in private vehicles is to be launched soon.

7) The price of tomatoes has reached Rs 100 per kg due to reduced supply due to rain. The price of drumsticks has reached Rs 400 per kg.

Tuesday, 25 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 26.11.2025 (புதன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 26.11.2025 (புதன்)

1) கோவையில் உலகத்தரத்தில் செம்மொழிப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2) இன்று அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டுக் குடியரசுத் தலைவர் தலைமையில் டில்லியில் விழா நடைபெறுகிறது.

3) ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா எனத் தமிழகத்தைக் குறிப்பிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

4) இதுவரை தமிழகத்தை நோக்கி 11 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

5) சென்னைக்குக் குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி முழுமையாக நிரம்பியது

6) எத்தியோப்பியாவில் வெடித்த எரிமலையால் உருவான சாம்பல் மற்றும் புகையால் இந்திய விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



Education & General Knowledge News – 26.11.2025 (Wednesday)

1) Chief Minister M.K. Stalin inaugurated a world-class classical Tamil park in Coimbatore.

2) A ceremony is being held in Delhi under the presidency of the President today ahead of Constitution Day.

3) Prime Minister Narendra Modi has expressed pride, calling Tamil Nadu the birthplace of democracy, India.

4) Chief Minister M.K. Stalin has said that investments worth Rs 11 lakh crore have been attracted towards Tamil Nadu so far.

5) Veeranam Lake, which supplies drinking water to Chennai, is completely filled

6) Indian air traffic has been affected by ash and smoke generated by the volcano that erupted in Ethiopia.

Monday, 24 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (25.11.2025) - செவ்வாய்

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (25.11.2025)

1) வரும் கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் படிப்படியாக மாற்றப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2) போட்டித் தேர்வு மையங்களில் அதிகரித்து வரும் தற்கொலைகள் குறித்து ஆராய நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.

3) ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து மலேசியாவும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமுக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

4) தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாது என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உறுதி அளித்துள்ளார்.

5) உச்சநீதி மன்றத்தின் 53 ஆவது தலைமை நீதிபதியாக சந்திரகாந்த் பதவியேற்றார்.

6) நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஐஎன்எஸ் மாஹே கடற்படையில் இணைக்கப்பட்டது.

7) பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 89.






Education & GK News

1) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that the curriculum will be gradually changed from the next academic year.

2) A parliamentary committee has been formed to look into the increasing number of suicides at competitive examination centers.

3) Following Australia, Malaysia has also banned the use of social media by children under the age of 16.

4) Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik has assured that the names of eligible voters will not be deleted.

5) Chandrakant took oath as the 53rd Chief Justice of the Supreme Court.

6) Anti-submarine warfare ship INS Mahe was commissioned into the Navy.

7) Veteran Hindi actor Dharmendra passed away due to ill health. He was 89.

Sunday, 23 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (24.11.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (24.11.2025)

1) வங்கக் கடலில் சென்யார் புயல் நாளை மறுநாள் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2) தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3) கனமழை எச்சரிக்கை காரணமாக 15 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4) சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் 78 சதவீதம் நிரம்பின.

5) ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தெற்குலகின் குரலை உயர்த்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

6) உச்சநீதிமன்றத்தின் 53 ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்கிறார்.

7) வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்துமாறு வங்கதேசம் இந்தியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

8) காவல்துறை மரியாதையுடன் ஈரோடு தமிழன்பனின் உடல் தகனம் செய்யப்பட்டது.







Education & GK News

1) The Meteorological Department has said that Cyclone Senyar is likely to form in the Bay of Bengal the day after tomorrow.

2) A heavy rain warning has been issued for the southern and delta districts of Tamil Nadu.

3) A holiday has been declared for schools in 15 districts due to the heavy rain warning.

4) The lakes that supply drinking water to Chennai are 78 percent full.

5) Prime Minister Narendra Modi, who participated in the G20 summit, has expressed his hope that we will raise the voice of the South.

6) Suryakanth will take oath as the 53rd Chief Justice of the Supreme Court today.

7) Bangladesh has written a letter to India to extradite former Bangladesh Prime Minister Hak Hasina to Bangladesh.

8) Erode Tamilanpan's body was cremated with police honors.

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (23.11.2025) - ஞாயிறு

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (23.11.2025)

1) வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 26 இல் புயலாக வலுபெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2) தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 10 மசோத்தாகளை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

4) பீகாரில் ஆறு மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியல் கலந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5) டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததைத் தொடர்ந்து 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

6) நடப்பு நிதியாண்டில் தொடர்வண்டிப் போக்குவரத்து 100 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு சாதனைப் படைத்துள்ளது.

7) கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.

8) துபாய் விமான சாகச நிகழ்ச்சியின் போது விபத்தில் உயிரிழந்த நமன் சியால் உடலுக்கு சூலூர் விமானப்படைத் தளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.






Education & GK News

1) The Meteorological Department has said that the low-pressure area formed in the Bay of Bengal is likely to strengthen into a cyclone on November 26.

2) A yellow alert has been issued for 16 districts in Tamil Nadu today.

3) The central government plans to pass 10 bills in the winter session of Parliament.

4) Uranium mixed in breast milk in six districts of Bihar has caused shock.

5) Following the increase in air pollution in Delhi, 50 percent of employees have been allowed to work from home.

6) Railway transport has set a record by handling 1 billion tonnes of goods in the current financial year.

7) Poet Erode Tamilanban passed away due to illhealth. He was 92 years old.

8) Tributes were paid to the body of Naman Sial, who died in an accident during a Dubai air show, at the Sulur Air Force Base.