Tuesday, 7 April 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 08.04.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 08.04.2026

1) நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 26 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

2) ஆண்டுக்கு 3 முறை நடைபெற்று வந்த CA இறுதித்தேர்வு 2 முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

3) காலாண்டிற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை இன்று அறிவிக்கப்பட உள்ளது.

4) கல்பாக்கத்தில் உள்ள Fast Breeder Reactor (FBR) வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மிகமுக்கியமான முன்னேற்றம் ஆகும்.

5) தமிழக சட்டசபைத் தேர்தலில் வேட்புமனு தாக்குதல் செய்துள்ள வேட்பாளர்களில் லால்குடி தொகுதியின் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பணக்கார வேட்பாளராக உள்ளார். அவர் பெயரில் 1049 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

6) வேட்புமனுக்களைத் திரும்ப பெற நாளை கடைசி நாளாகும்.

7) ஒரே இரவில் ஈரானை அழித்து விட முடியும், அந்த இரவு நாளைய இரவாக கூட இருக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

8) எரிபொருள் தட்டுபாட்டால் பாகிஸ்தானில் பகுதியளவு லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

9) வளைகுடா போர் உக்கிரம் அடைவதைத் தொடர்ந்து சவூதி – பஹ்ரைனை இணைக்கும் கிங் பஹத் காஸ்வே பாலம் மூடப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) 1857 இல் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட மங்கள் பான்டே தூக்கிலிடப்பட்ட நாள் இன்று.

2) 1973 இல் ஓவியர் பாப்லோ பிக்காசோ மறைந்த தினம் இன்று.




Education & GK News

1) 2.6 million candidates across the country have applied for the NEET examination.

2) The CA Final Examination, which was previously conducted three times a year, has been reduced to two times a year.

3) The Reserve Bank of India's monetary policy for the current quarter is scheduled to be announced today.

4) The Fast Breeder Reactor (FBR) located in Kalpakkam has successfully commenced operations. This marks a pivotal milestone in India's journey in nuclear energy.

5) Among the candidates who have filed their nominations for the Tamil Nadu Legislative Assembly elections, Leema Rose—the AIADMK candidate for the Lalgudi constituency—stands out as the wealthiest candidate. She has declared assets worth Rs. 1,049 crore in her name.

6) Tomorrow is the final day for the withdrawal of nominations.

7) US President Donald Trump has issued a warning, stating that Iran could be destroyed overnight—and that "night" could very well be tomorrow night.

8) A partial lockdown has been declared in Pakistan due to a fuel shortage.

9) Following the intensification of the Gulf War, the King Fahd Causeway—which connects Saudi Arabia and Bahrain—has been closed.

Today in History...

1) Today marks the anniversary of the execution of Mangal Pandey, who sowed the seeds for India's First War of Independence in 1857.

2) Today marks the anniversary of the passing of the renowned artist Pablo Picasso in 1973.

No comments:

Post a Comment