சந்தோஷமாக இருப்பது எப்படி?
சந்தோஷம் என்பது ஒரு தோட்டம்
போன்றது. சரியான உரம், தண்ணீர் இருந்தால் அது தானாக வளரும்.
இதில் ஒரு சுவாரஸ்யமான
மேட்டர் என்னவென்றால், உங்கள் மகிழ்ச்சியில் 40 சதவீதம் உங்கள் கையில்தான் இருக்கிறது.
அப்படியானால் மீதி எங்கே
இருக்கிறது என்கிறீர்களா? மீதி 60 சதவீதம்
மரபணுவும் சூழ்நிலையும் சார்ந்து இருக்கிறது.
60 சதவீதத்தை எதுவும்
செய்ய முடியாது. ஆனால், அந்த 40 சதவீதத்தை எப்படி மேனேஜ் செய்ய முடியும். எப்படி என்கிறீர்களா?
மனசும் உடம்பும் பெஸ்ட்
ப்ரெண்ட்ஸ். நீங்கள் ஓடத் தொடங்கினால் மூளை என்டார்பின் எனும் குதூகல கெமிக்கல்களை
ரிலீஸ் செய்யும். இதற்காக நீங்கள் மாரத்தான் ஓட வேண்டாம். தினமும் வெறும் 20 நிமிடம்
டான்ஸ் ஆடினாலோ அல்லது நடையாய் நடந்தாலோ கூட போதும்.
வீட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு
போனஸ் சந்தோஷம் கிடைக்கிறது. நாய் ஒரு ஜட்ஜ்மென்ட் பார்க்காத நண்பன். அது உங்களை வாக்கிங்
கூட்டிச் செல்லும், கூடவே உங்கள் மன அழுத்தத்தையும் குறைக்கும்.
சந்தோஷம் என்பது ஒரு மல்டிப்ளையர்.
தனியாகச் சிரிப்பதை விட நண்பர்களுடன் சிரிப்பது எனர்ஜியை ஏற்றும். தினமும் ஒரு ஐந்து
நிமிடம் ஒதுக்குங்கள். பழைய நண்பருக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அல்லது உறவினருக்கு ஒரு போன்.
இது உங்கள் மூளைக்கு ஒரு பாசிட்டிவ் பூஸ்ட். நாய் பூனைகளைத் தடவிக் கொடுப்பதும் இந்த
லிஸ்ட்டில் சேரும்!
தியானம் என்பது ஏதோ சாமியார்கள்
செய்வது மட்டுமல்ல. அது ஒரு சைக்காலஜிக்கல் ட்ரீட்மென்ட். இதற்குப் பல டெக்னிக்குகள்
இருக்கின்றன. ஒரு சின்ன டெக்னிக் 5-5-5. அதென்ன என்கிறீர்களா?
5 செகண்ட் மூச்சை இழுங்கள்.
5 செகண்ட் அப்படியே பிடியுங்கள்.
5 செகண்ட் மெதுவாக விடுங்கள்.
இதோடு கொஞ்சம் உங்கள்
மீதே உங்களுக்குக் கொஞ்சம் கரிசனத்தைச் சேர்த்துக்கொண்டால் ரிசல்ட் இன்னும் டாப். கஷ்டமான
நேரத்தில் உங்கள் நெஞ்சில் கை வைத்து, பரவாயில்லை, பார்த்துக்கலாம், என்று ஒரு நண்பனிடம்
பேசுவது போல உங்களிடமே நீங்கள் பேசிக்கொள்ளுங்கள்.
வெறும் ஜாலியாக இருப்பதால்
மட்டும் சந்தோஷம் நீடிக்காது. ஒரு நோக்கம்
வேண்டும். தெருவில் கிடக்கும் குப்பையை எடுப்பது அல்லது பக்கத்து வீட்டுப் பெரியவருக்கு
உதவி செய்வது போன்ற சின்ன சின்ன மைக்ரோ வாலண்டியரிங் காரியங்கள் உங்கள் மனதுக்கு ஒரு
நிறைவைத் தரும்.
சிரிப்பு ஒரு நல்ல ஒர்க்
அவுட். ஒரு நிஜமான புன்னகைக்கு 12 தசைகள் வேலை செய்ய வேண்டும். ஒரு குழந்தை ஒரு நாளைக்கு
300 முறை சிரிக்கிறது. ஆனால் நாம்? வெறும் 17 முறைதான்!
தினம் 15 நிமிட சிரிப்பு
என்பது 10 முதல் 40 கலோரிகளை எரிக்கிறது. ஜிம்முக்குப்
போகாமலே உடல் எடையைக் குறைக்க இதோ ஒரு வழி!
சந்தோஷம் என்பது ஒரு திறமை.
அதைத் தினமும் பிராக்டிஸ் செய்ய வேண்டும். ஒரு ஜாய் டூல் கிட் தயார் செய்து வைத்துக்
கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த பாட்டு, மொபைலில் இருக்கும் சில ஜோக் வீடியோக்கள்,
பழைய போட்டோக்கள். மூட் அவுட் ஆகும்போது இரண்டு நிமிடம் இதைத் திறந்து பார்த்தால் போதும்.
நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போது
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலமாகிறது. அதாவது, சிரிப்பு ஒரு மருந்து மட்டுமல்ல, ஒரு
கவசமும் கூட!
இன்று நீங்கள் செய்த மூன்று
நல்ல விஷயங்கள் என்னென்ன? யோசித்துப் பாருங்கள், சந்தோஷம் தானாக வரும்.
அப்புறம் என்ன? சந்தோசமாக
இருங்கள். அதற்கு எதாவது தடையாக இருந்தால் சொல்லுங்கள். அதை எப்படிச் சரி செய்வது என்பதைச்
சேர்ந்தே யோசிப்போம்.
*****

No comments:
Post a Comment