Saturday, 18 April 2026

தேர்தல் அலுவலர்களுக்குப் பயன்படும் தேர்தல் விதி எண் குறியீடுகளும்விளக்கங்களும்

தேர்தல் அலுவலர்களுக்குப் பயன்படும்

தேர்தல் விதி எண் குறியீடுகளும்விளக்கங்களும்

Form 10 – தேர்தல் முகவர்களை நியமிப்பதற்கான படிவம்

Form 14 – பார்வையற்ற அல்லது உடல் ஊனமுற்ற வாக்காளர்களுக்கு உதவியாளர்களை அனுமதிக்கும் படிவம்

Form 14A – அந்த  உதவியாளர்கள் ரகசியம் காப்போம் என அளிக்கும் உறுதிமொழி

Form 16 – காகித முத்திரைக் கணக்கு

17A – வாக்காளர் பதிவேடு

17B – ஆய்வுக்குரிய வாக்குகளின் (Tendered Vote) பதிவேடு

17C – வாக்குப் பதிவு விவரம்

49L – வாக்காளரை அடையாளம் கண்டு மை வைத்தல், கையெழுத்து / கைரேகை பெறுதல்

49M – வாக்காளர் வாக்குச் சாவடிக்குள் நுழைந்தது முதல் வெளியேறும் வரை பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வாக்களிக்கும் ரகசியம் உட்பட. ரகசியம் மீறப்பட்டால் ஓட்டு செல்லாது.

49MA – பரிசோதனை வாக்கு (Test Vote) அளிக்க. புகார் பொய்யெனத் தெரிந்தால் தண்டனை உண்டு.

49N – வாக்களிக்க உதவி தேவைப்படுவோருக்கு அதை அனுமதிக்க

49O – வாக்களிக்க விருப்பமில்லை எனப் பதிவு செய்ய

49P – ஆய்வுக்குரிய வாக்கு (Tendered Vote) செலுத்த

49T – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது எனில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்

*****

No comments:

Post a Comment