வானளாவிய
தேனீக்கள் – நியூயார்க் மொட்டை மாடி அதிசயங்கள்!
தேனீக்கள்
இல்லை என்றால் மனித இனம் சில ஆண்டுகளிலேயே அழிந்துவிடும் என்றார் ஐன்ஸ்டீன்.
அது
நிஜமோ இல்லையோ, நாம் சாப்பிடும் தக்காளி, வெள்ளரி முதல் பாதாம் வரை
எல்லாவற்றுக்கும் இந்தச் சின்னஞ்சிறு பூச்சிகளின் மகரந்த சேர்க்கைக்கு அதாவது
பாலினேஷன் சேவைக்குத் தேனீக்கள் அவசியம்.
இப்போது
நியூயார்க் போன்ற கான்கிரீட் காடுகளில் ஒரு சுவாரஸ்யமான புரட்சி நடக்கிறது.
அதுதான் ரூப்டாப் பீ கீப்பிங்.
நியூயார்க்
மக்கள் உயரமான கட்டிடங்களின் உச்சியில் பல மில்லியன் வேலையாட்களை
தட் மீன்ஸ் தேனீக்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள்.
இப்போது
நியூயார்க் மொட்டை மாடிகளில் தேனீக்கள் வளர்ப்பது என்பது முடி வளராத மண்டையில் அமேசான்
காட்டு மூலிகையால் முடி பல்கி பெருகுவது போலப் பெருகிக் கொண்டிருக்கிறது.
தேன்
விற்பது ஒரு பக்கம், சுற்றுச்சூழல் சமநிலை இன்னொரு
பக்கம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் மேட்டர் இது.
நியூயார்க்கின்
மிகப்பெரிய கண்காட்சி மையமான ஜாவிட்ஸ் சென்டர் உச்சியில் ஏழு ஏக்கர் பரப்பளவில்
ஒரு கிரீன் ரூப் இருக்கிறது. அங்கே தேனீக்கள் ஜாலியாக உலவுகின்றன. அந்தத்
தேனீக்கள் கொடுக்கும் தேனை வைத்து அந்த மையத்தின் உணவகத்திலேயே ஸ்பெஷல் உணவுகளைத்
தயாரிக்கிறார்கள்.
இன்னொரு
பக்கம் பேஷன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி. அங்கே
தேனீக்கள் பூக்களுக்குப் போயிட்டு வருவது ஒரு பக்கம் என்றால், தேன் மெழுகை வைத்து துணிகளுக்கு இயற்கை சாயம் தயாரிக்கும் முறையை
மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறார்கள். சயின்ஸும் பேஷனும் கைகோர்க்கும் இடம்
இதுதான்!
தரைமட்டத்தில்
தேனீ வளர்ப்பதை விட, மொட்டை மாடியில் வளர்ப்பதில்
சில டெக்னிக்கல் நன்மைகள் உண்டு. அவையாவன,
முக்கியமாக
பூச்சிகளின் தொல்லைகள் குறைவு. எறும்புகள், வண்டுகள்
போன்றவை மண்ணில்தான் வாழும். அவ்வளவு உயரத்துக்கு அவை லிஃப்ட் ஏறிப் போகாது!
உயரத்தில்
இருக்கும் தேனீக்கள் சுமார் 3 மைல் தூரம் வரை பறந்து சென்று
அக்கம் பக்கத்துத் தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன. இது நிறைய
ஏரியாவைக் கவரேஜ் செய்ய உதவுகின்றது.
உயிரியில்
நிபுணர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறார்கள். உலகில் 40,000
வகை தேனீக்கள் உள்ளன. தக்காளி வளர பம்பிள் தேனீக்கள் வேண்டும்,
வெள்ளரிக்கு ஸ்குவாஷ் தேனீக்கள் வேண்டும். வெறும் தேன் தேனீக்கள்
மட்டும் போதாது!
அமெரிக்காவுக்குப்
போட்டியாக நெதர்லாந்தின் உட்ரெக்ட் நகரில் ஓர் அசத்தல் ஐடியா செய்திருக்கிறார்கள்.
நகரின் 300க்கும் மேற்பட்ட பஸ் ஸ்டாப் கூரைகளைச் சிறிய காடுகளாக தட் மீன்ஸ் க்ரீன்
ரூப்ஸ் ஆக மாற்றியிருக்கிறார்கள். இது தேனீக்களுக்கு ஒரு ஸ்டாப்பிங் போலச்
செயல்படுகிறது. மழையை உறிஞ்சிக் கொள்வதோடு, நகரின்
வெப்பத்தையும் இது குறைக்கிறது.
தேனீயை
ஒரு சின்னப் பூச்சிதானே என்று அலட்சியப்படுத்தாதீர்கள். உங்கள் மொட்டை மாடியில்
ஒரு சின்னப் பூந்தொட்டி வைத்தால் கூட அது ஒரு தேனீயின் உயிரைக் காப்பாற்றலாம்.
இயற்கை என்பது ஒரு பெரிய சங்கிலித் தொடர். அதில் ஒரு கண்ணி அறுந்தாலும் மொத்தச்
சங்கிலியும் விழுந்துவிடும்.
நியூயார்க்கின்
சென்ட்ரல் பார்க் மிருகக்காட்சி சாலை முதல் ஹெல்ஸ் கிச்சன் வரை பல இடங்களில்
இப்போது தேனீ சரணாலயங்கள் பெருகிவிட்டன. கான்கிரீட் காடு இப்போது நிஜக் காடாக மாற
முயற்சி செய்கிறது!
நீங்களும்
மாற்ற முயற்சிக்கலாம்! ஒரு பூச்செடி வளர்த்தால் கூட போதும். ஹாய்
சொல்ல ஒரு தேனீயாவது வந்து விடும். நீங்கள் ஹலோ சொல்லி அதனோடு உரையாடலாம்.
*****

No comments:
Post a Comment