கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.04.2026
இன்று உலக ஹோமியோபதி தினம்.
1) பணி
புரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
2) தமிழகம்
முழுவதும் இறுதி வேட்பாளர் பட்டியல் படி, சுமார் 4,630 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில்
உள்ளனர்.
3) தமிழக
சட்டசபை தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவடைந்துள்ளது.
4) இந்திய
அரசு தனது சந்தைக் கடன்களுக்காக 34,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசுப் பத்திரங்களை
இன்று ஏலம் விடுகிறது.
5) வட
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட
3°C வரை உயரக்கூடும்.
6) அமெரிக்கா
மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேரடிப்
பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
வரலாற்றில் இன்று…
1) ஹோமியோபதி
மருத்துவ முறையைக் கண்டறிந்த ஜெர்மனி மருத்துவர் டாக்டர் சாமுவேல் ஹானிமன் 1755 இல்
பிறந்த தினம் இன்று.
2)
1875 இல் தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்த தினம் இன்று.
3) இந்தியாவின்
முன்னாள் பிரதமரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான மொரார்ஜி தேசாய் தனது 99 ஆவது வயதில்
1995 இல் மறைந்த தினம் இன்று.
Education & GK News
Today is
World Homeopathy Day.
1) Today is the last day to apply for the Teacher
Eligibility Test (TET) for working teachers.
2) According to the final list of candidates across
Tamil Nadu, approximately 4,630 candidates are in the electoral fray.
3) The process of allocating symbols to independent
candidates for the Tamil Nadu Legislative Assembly elections has been
completed.
4) The Government of India is auctioning government
securities worth Rs. 34,000 crore today to raise market loans.
5) Maximum temperatures in the regions of North Tamil
Nadu, Puducherry, and Karaikal are likely to rise by up to 3°C above normal
levels.
6) Direct talks between the United States and Iran begin
today in Islamabad, the capital of Pakistan.
Today in
History…
1) Today marks the birth anniversary of Dr. Samuel
Hahnemann, the German physician who founded the system of Homeopathic medicine;
he was born in 1755.
2) Today marks the day in 1875 when Dayananda Saraswati
founded the Arya Samaj.
3) Today marks the day in 1995 when Morarji Desai—a
former Prime Minister of India and a recipient of the Bharat Ratna—passed away
at the age of 99.




No comments:
Post a Comment