Friday, 24 April 2026

லேட் ப்ளூமர்ஸ் – வெற்றிக்கு ஏது எக்ஸ்பயரி டேட்?

லேட் ப்ளூமர்ஸ் – வெற்றிக்கு ஏது எக்ஸ்பயரி டேட்?

வெற்றி என்பது ரயிலைப் பிடிப்பது போன்றது என்கிறார்கள். ஆனால், சிலருக்கு அந்த ரயிலே நாற்பது வயதில்தான் பிளாட்பாரத்துக்கே வருகிறது. முப்பது தாண்டிவிட்டால் லைஃப் முடிந்துவிட்டது என்று நினைப்பவர்களுக்கு இதோ சில லேட் ப்ளூமர் கதைகள்.

வேரா வாங் முதலில் ஒரு ஐஸ் ஸ்கேட்டிங் வீராங்கனை. ஒலிம்பிக் கனவு தகர்ந்தது. அடுத்து 20 வருடம் ஒரு பத்திரிகையில் எடிட்டர் வேலை. தன் திருமணத்துக்காக ஒரு நல்ல கவுன் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில், 40 வயதில் சொந்தமாக டிசைன் செய்ய ஆரம்பித்தார். இன்று உலகின் காஸ்ட்லி திருமண உடைகள் இவர் பெயரில்தான் விற்கின்றன. இவரது முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் அதிகம்!

மார்த்தா ஸ்டீவார்ட் முதலில் ஒரு மாடல், பிறகு ஸ்டாக் புரோக்கர். 30 வயதில் ஒரு கேட்டரிங் பிசினஸ். ஆனால், 41 வயதில்தான் தன் முதல் சமையல் புத்தகத்தை வெளியிட்டார். அவருடைய டாக்டர் சொன்னாராம், நீங்கள் ஒரு லேட் ப்ளூமர் என்று. அதை ஒரு பாராட்டாக எடுத்துக்கொண்ட மார்த்தா, இன்று பில்லியன் டாலர் மீடியா அதிபர். கனவு காண வயது ஒரு தடையல்ல என்பதற்கு இவர் ஒரு லைப் ஸ்டைல் உதாரணம்.

ஸ்டீவ் கேரல் இருபது வயதில் சின்னச் சின்ன விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருந்தார். முப்பது வயதில் பெரிய அடையாளம் இல்லை. நாற்பத்து மூன்று வயதில்தான் தி பார்ட்டி இயர் ஓல்டு வர்ஜின் படத்தில் நடித்தார். அப்புறம் தி ஆபீஸ் என்ற படத்தில் நடித்தார். இன்று ஹாலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகர். வெயிட்டிங் பீரியட் என்பது வீணான காலம் அல்ல, அது ஒரு பயிற்சிக் காலம்.

ஜூலியா சைல்ட்டின் கதை வித்தியாசமானது மற்றும் ஆச்சரியமானது. ஆச்சரியம் என்னவென்றால், முப்பத்து ஏழு வயது வரை ஜூலியாவுக்கு சமையலே தெரியாது! கணவருடன் பாரிஸ் சென்றபோதுதான் பிரஞ்சு உணவுகள் மேல் காதல் வந்தது. லெ கார்டன் ப்ளூ பள்ளியில் சேர்ந்து ஒன்பது வருடம் மெனக்கெட்டு புத்தகம் எழுதினார். அவர் டிவியில் அறிமுகமானபோது வயது ஐம்பது. அமெரிக்க சமையலறைகளை மாற்றியமைத்த அந்தப் பெரியம்மாவுக்கு சமையல் என்பது ஒரு லேட் பேஷன்.

ஐன்ஸ்டீன், இவரை ஒரு ஜீனியஸ் என்று கொண்டாடுகிறோம். ஆனால், இருபத்தாறு வயது வரை அவருக்கு ஒரு கல்லூரி வேலை கூட கிடைக்கவில்லை. ஒரு பேடன்ட் ஆபீஸில் கிளர்க்காக இருந்தபோதுதான் ரிலேட்டிவிட்டி தியரியை எழுதினார். அதற்காக அவருக்கு 42 வயதில்தான் நோபல் பரிசு கிடைத்தது. கேள்வி கேட்பதை நிறுத்தாதீர்கள். ஒவ்வொரு நாளும் இந்த பிரபஞ்ச ரகசியத்தை கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ள முயலுங்கள், என்றார் அவர்.

உங்களுக்கு இருபத்தி இரண்டு வயதில் வேலை கிடைக்கவில்லையா? முப்பது வயதில் செட்டில் ஆகவில்லையா? கவலைப்படாதீர்கள்.

சில பூக்கள் அதிகாலையில் பூக்கும், சில பூக்கள் அந்தி மாலையில் மலரும். மல்லிகைக்கும் அந்திமந்தாரைக்கும் அதனதன் அழகு உண்டு.

வெற்றிக்குத் தேவை டைமிங் அல்ல, விடாமுயற்சி.

ஐன்ஸ்டீன் முதல் மார்த்தா வரை எல்லோரும் சொல்வது இதைத்தான்.

இது போன்ற கதைகள் நிறைய இருக்கின்றன. காத்திருங்கள்!

*****

No comments:

Post a Comment