Monday, 6 April 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.04.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.04.2026

இன்று உலக சுகாதார தினம்

1) சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், தொடர்புடைய 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2) தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. சுமார் 3413 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

3) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்குகிறது. முறையான ஆவணங்கள் இல்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும்.

4) போர்ப் பதற்றம் காரணமாக இஸ்ரேலுக்கான விமான சேவையை உலகின் பல நாடுகள் ரத்து செய்துள்ளன.

5) வளைகுடா போர் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாகக் குறையக் கூடும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

6) ஹோர்முஸ் நீர்ச்சந்தியை ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும், இல்லையெனில் ஈரானின் எரிசக்தி மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகள் மீது மிகப்பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

7) அமெரிக்க அதிபரின் பேச்சைத் திமிர்பிடித்த மற்றும் முதிர்ச்சியற்ற பேச்சு, என ஈரானிய ராணுவம் கடுமையாகச் சாடியுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) 1948 இல் உலக சுகாதார அமைப்பு (WHO) நிறுவப்பட்ட தினம் இன்று.

2) 1954 இல் ஜாக்கிசான் பிறந்த தினம் இன்று.

3) 1947 இல் ஹென்றி போர்டு மறைந்த தினம் இன்று.

Education & GK News

Today is World Health Day.

1) In the Sathankulam father-son murder case, the court has delivered a verdict sentencing to death the 9 police personnel implicated in the crime.

2) The filing of nomination papers for the Tamil Nadu Legislative Assembly elections concluded yesterday. Approximately 3,413 nominations have been filed.

3) The scrutiny of nomination papers begins today. Nominations lacking proper documentation will be rejected.

4) Due to escalating war tensions, several countries across the globe have suspended their flight services to Israel.

5) Projections suggest that India's economic growth could decline to 6 percent as a result of the Gulf War.

6) US President Donald Trump has issued a warning stating that Iran must immediately reopen the Strait of Hormuz; otherwise, massive attacks will be launched against Iran's energy sector and critical infrastructure.

7) The Iranian military has strongly condemned the US President's remarks, characterizing them as arrogant and immature.

Today in History…

1) Today marks the anniversary of the founding of the World Health Organization (WHO) in 1948.

2) Today is the birthday of Jackie Chan, born in 1954.

3) Today marks the anniversary of the passing of Henry Ford in 1947.

No comments:

Post a Comment