Wednesday, 15 April 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.04.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.04.2026

இன்று உலக குரல் தினம்.

1) இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

2) சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

3) சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகம் 99.92% தேர்ச்சியுடன் தேசிய அளவில் மாநில வரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

4) சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேசிய அளவில் 93.7% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

5) பீகாரின் புதிய முதல்வராகச் சாம்ராட் சவுத்ரி பதவி ஏற்றுக்கொண்டார்.

6) சர்வதேச நாணய நிதியம் (IMF) 2026 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.1% ஆகக் குறையும் எனத் தெரிவித்துள்ளது.

7) அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது, என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

8) அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஆயத்தங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கா ஹோர்முஸ் நீர்ச்சந்தியில் கடற்படை முற்றுகையை அதிகரித்துள்ளது.

9) அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் உட்பட 11 அழிப்புக் கப்பல்கள் மற்றும் 4 தாக்குதல் கப்பல்கள் மத்திய கிழக்கு கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

வரலாற்றில் இன்று…

1) இந்தியாவின் முதல் ரயில் 1853 இல் மும்பைக்கும் தானேவுக்கும் இடையே இயக்கப்பட்ட தினம் இன்று.

2) சார்லி சாப்ளின் 1889 இல் பிறந்த தினம் இன்று.

3) ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான வில்பர் ரைட் 1867 இல் பிறந்த தினம் இன்று.

Education & GK News

Today is World Voice Day.

1) Parliament convenes today. The Parliamentary Constituency Delimitation Bill is scheduled to be tabled during today's session.

2) The results for the CBSE Class 10 Board Examinations were released yesterday.

3) Tamil Nadu has achieved a remarkable feat by securing the top spot among states nationwide in the CBSE Class 10 Board Examinations, recording a pass percentage of 99.92%.

4) Nationally, 93.7% of students have passed the CBSE Class 10 Board Examinations.

5) Samrat Choudhary has assumed office as the new Chief Minister of Bihar.

6) The International Monetary Fund (IMF) has projected that global economic growth will slow down to 3.1% in 2026.

7) US President Donald Trump has expressed optimism that the conflict with Iran is nearing its end.

8) Even as preparations for peace talks are underway, the United States has intensified its naval presence in the Strait of Hormuz.

9) A total of 11 destroyers—including the US aircraft carrier USS Abraham Lincoln—and 4 assault ships have been deployed in the waters of the Middle East.

On This Day in History…

1) Today marks the anniversary of the launch of India's first passenger train service, which ran between Mumbai and Thane in 1853.

2) Today is the birth anniversary of Charlie Chaplin, who was born in 1889.

3) Today is the birth anniversary of Wilbur Wright—one of the pioneers of aviation—who was born in 1867.

No comments:

Post a Comment