Friday, 21 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (22.11.2025) - சனி

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (22.11.2025)

1) வங்கக் கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

2) ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென்ஆப்பிரிக்கா சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.

3) உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபரி பி.ஆர்.கவாய் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். 53 ஆவது புதிய தலைமை நீதிபதியாக சந்திரகாந்த் திங்களன்று பதவியேற்கிறார்.

4) நான்கு தொழிலாளர் தொடர்பான சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

5) துபாயில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து விமானி பலியானார்.

Education & GK News

1) A new cyclone is forming in the Bay of Bengal today. Due to this, heavy rains with thunder are likely in Tamil Nadu.

2) Prime Minister Narendra Modi has left for South Africa to attend the G20 summit.

3) Supreme Court Chief Justice P.R. Kawai is retiring tomorrow. Chandrakant will take oath as the 53rd new Chief Justice on Monday.

4) The central government has announced that four labor-related laws have come into force.

5) India's Tejas fighter jet crashes during an aerobatic show in Dubai, killing the pilot.

Thursday, 20 November 2025

கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 21.11.2025 (வெள்ளி)

கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 21.11.2025 (வெள்ளி)

1) கைபேசி பயன்பாட்டில் மாணவர்களுக்குச் சுயகட்டுபாடு அவசியம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2) மசோதா ஒப்புதல் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு விதிக்க இயலாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

3) பத்தாவது முறையாகப் பீகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்றார்.

4) கோவாவில் இன்று சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது.

5) உலகக் கோப்பைக் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா 9 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.



Education & General Knowledge News – 21.11.2025 (Friday)

1) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that self-control is necessary for students in mobile phone use.

2) The Supreme Court has said that it is not possible to impose a deadline on the Governor and the President on the issue of bill approval.

3) Nitish Kumar took oath as the Chief Minister of Bihar for the tenth time.

4) The International Film Festival begins in Goa today.

5) India has created a record by winning 9 gold medals in the World Cup boxing tournament.

வாக்காளர் திருத்தப் படிவத்தைப் (SIR) பூர்த்தி செய்யும் முறை

வாக்காளர் திருத்தப் படிவத்தைப் (SIR) பூர்த்தி செய்யும் முறை

சிறப்பு தீவிர வாக்காளர் கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கான மாதிரிப் படிவத்தைக் கீழே காண்க.

Wednesday, 19 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.11.2025 (வியாழன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.11.2025 (வியாழன்)

1) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 80 லட்சம் மதிப்பீட்டில் சிறார் அறிவியல் பூங்காவைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

2) இயற்கை விவசாயத்தின் மணி மகுடமாகத் தமிழகம் திகழ்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் குறித்துப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

3) இந்தியாவில் உறுப்பு மாற்ற சிகிச்சைகளில் தமிழகத்தின் பங்களிப்பு 24 சதவீதமாக உள்ளது.

4) பீகார் முதல்வராக நிதீஷ் குமார் இன்று பதவியேற்கிறார்.

5) நாளை மறுதினம் புதிய புயல் சின்னம் வங்கக் கடலில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6) இந்தோனேசியாவில் செமெரு எரிமலையின் சீற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து உச்சகட்ட அபாயநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.



Education & General Knowledge News – 20.11.2025 (Thursday)

1) School Education Minister Anbil Mahesh Poyyamozhi inaugurated the Children's Science Park at the Anna Centenary Library in Kotturpuram, Chennai at a cost of Rs 80 lakhs.

2) Prime Minister Narendra Modi has expressed his pride in Tamil Nadu, saying that it is the crown jewel of organic farming.

3) Tamil Nadu's contribution to organ transplants in India is 24 percent.

4) Nitish Kumar will take oath as the Chief Minister of Bihar today.

5) The Meteorological Department has said that a new storm is likely to form in the Bay of Bengal the day after tomorrow.

6) The intensity of the Semeru volcano in Indonesia has increased. Following this, an extreme danger has been declared.

Tuesday, 18 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (19.11.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (19.11.2025)

1) இன்று கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் இயற்கை வேளாண்மை மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார்.

2) 9 கோடி பி.எம்.கிசான் திட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான 21 ஆம் தவணைத் தொகையையும் பிரதமர் விடுவிக்க உள்ளார்.

3) விரைவில் இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோஷல் தெரிவித்துள்ளார்.

4) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்தை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவையம் ஏற்றுக் கொண்டது.

5) செயற்கை நுண்ணறிவு சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

6) அக்டோபர் மாதத்தில் மின்சார மகிழ்வுந்துகளின் விற்பனை 57 சதவீதம் உயர்ந்துள்ளது.

7) கடந்த மாதங்களில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளது.




Education & GK News

1) Prime Minister Narendra Modi will inaugurate the Organic Farming Conference at Kodisia Complex, Coimbatore today.

2) The Prime Minister is also going to release the 21st installment of Rs 9 crore to farmers under the PM Kisan scheme.

3) Union Minister Piyush Ghoshal has said that the trade agreement between India and the US will be finalized soon.

4) US President Donald Trump's Gaza peace plan has been accepted by the United Nations Security Council.

5) Sundar Pichai has said that one should not blindly believe what artificial intelligence says.

6) Sales of electric vehicles have increased by 57 percent in October.

7) India's coal imports have increased by 14 percent in the last few months.

Monday, 17 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.11.2025 (செவ்வாய்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.11.2025 (செவ்வாய்)

1) தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘இயந்திரக் கற்றல் வழியாக பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உடலியக்கச் செயல்பாடு’ எனும் தலைப்பிலான முனைவர் பட்ட ஆய்விற்கான வாய்மொழித் தேர்வை நிறைவு செய்தார்.

2) தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று ஆய்வை மேற்கொள்ள மாதந்தோறும் 50000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

3) இயற்கை வேளாண்மை மாநாட்டைத் துவங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகிறார்.

4) தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5) செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

6) 16 ஆவது நிதிக்குழு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

7) பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு நவம்பர் 20 இல் பதவியேற்க உள்ளது.

8) வங்கதேச நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

9) சவூதி அரேபியாவின் மதீனா அருகே நடந்த பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

10) முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் வெள்ளையன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.



Education & General Knowledge News – 18.11.2025 (Tuesday)

1) Tamil Nadu School Education Minister Anbil Mahesh Poyyamozhi completed the VIVA for his doctoral thesis titled ‘Skill Development and Physical Activity for School Students through Machine Learning’.

2) Higher Education Minister Govi ​​Chezhiyan has announced that a monthly stipend of Rs. 50,000 will be provided to conduct historical research on Tamil society.

3) Prime Minister Narendra Modi is coming to Coimbatore tomorrow to inaugurate the Organic Farming Conference.

4) Yellow alert has been issued for 8 districts in Tamil Nadu, including Tirunelveli and Kanyakumari.

5) 1200 cubic feet of surplus water is being released from Chembarambakkam lake.

6) The 16th Finance Commission report has been submitted to the President.

7) The Nitish Kumar-led government in Bihar is set to take office on November 20.

8) Bangladesh court sentences Sheikh Hasina to death.

9) 42 Indians killed in bus accident near Medina, Saudi Arabia.

10) Former Murugappa Group chairman Vellaiyan passed away due to ill health. He was 72.

Sunday, 16 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.11.2025 (திங்கள்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.11.2025 (திங்கள்)

1) டிசம்பர் 10 முதல் 23 வரை அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணையைப் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது.

2) சென்னை, கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3) சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

4) தமிழகத்தில் 5.90 கோடி வாக்காளர் திருத்தப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

6) சபரிமலையில் மண்டல – மகரவிளக்குப் பூஜையையொட்டி நடை திறக்கப்பட்டது.

7) பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்குமாறு மின்வாரியம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

8) எண்ம தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.





Education & General Knowledge News – 17.11.2025 (Monday)

1) The School Education Department has released the schedule for the half-yearly exams from December 10 to 23.

2) Heavy rain warning has been issued for 15 districts including Chennai, Cuddalore, Nagapattinam, and Tiruvarur.

3) Time has been given till November 30 to insure the Samba paddy crop.

4) 5.90 crore voter correction forms have been distributed in Tamil Nadu.

6) Sabarimala was opened on the occasion of Mandala – Makaravilakku Puja.

7) The Electricity Board has advised the public to follow monsoon safety measures.

8) The provisions of the Digital Personal Data Protection Act have been published.