Indian
Maritime University இல் BBA படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும் மேலதிக
விவரங்களை அறியவும் கீழே உள்ள இணைப்பைத் தொடரவும்.
*****
Indian
Maritime University இல் BBA படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும் மேலதிக
விவரங்களை அறியவும் கீழே உள்ள இணைப்பைத் தொடரவும்.
*****
வேளாண்மை
பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட 14 இளம் அறிவியல்
பாடப்பிரிவுகளுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் மீன்வள அறிவியல், மீன்வளப்
பொறியியல் உள்ளிட்ட 6 இளம் அறிவியல் பாடப் பிரிவுகள், 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கும்,
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கவும் மேலதிக தகவல்களுக்கும் கீழே உள்ள இணைப்பைத் தொடரவும்.
*****
பாலிடெக்னிக் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டிற்குப் புதிய பாடத்திட்டம்!
பல்தொழில்நுட்ப
(பாலிடெக்னிக்) படிப்பிற்கான இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப்
புதிய பாடத்திட்டம் (Syllabus) அமல்படுத்தப்பட உள்ளது. அவ்விரு ஆண்டுகளுக்கான வரைவு
பாடத்திட்டத்தைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்தைப் பார்வையிடுவதற்குக் கீழே உள்ள இணைப்பைத் தொடரவும்.
*****
தமிழ்நாடு மின் வாரியத்தின் இணைய சேவைகளுக்கான புதிய முகவரி!
தமிழ்நாடு
மின்சார வாரியத்தின் அனைத்து இணைய சேவைகளுக்கும் புதிய முகவரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய இணையதள முகவரிக்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைத் தொடரவும்.
*****
ஆங்கிலச் சொற்களில் இப்படி சில அதிசயங்கள்!
ஆங்கிலச்
சொற்களில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையில் இப்படி சில சங்கதிகள் இருப்பதைப் படித்ததும்
எனக்குப் பிடித்துப் போனது. உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் பகிர்கிறேன்.
நீங்களும் படித்துப் பாருங்கள்.
1. ADULT ஐந்துஎழுத்துகள்
அதே போல YOUTH.
2. PERMANENT ஒன்பது எழுத்துகள்
அதே போல TEMPORARY.
3. GOOD நான்கு எழுத்துகள்
அதே போல EVIL.
4. BLACK ஐந்து
எழுத்துகள்.
அதே போல WHITE.
6.
LIFE நான்கு எழுத்துகள்
அதே போல DEAD.
7.
HATE நான்கு எழுத்துகள்
அதே போல LOVE.
9. ENEMIES ஏழு எழுத்துகள்
அதே போல FRIENDS.
10.
LYING ஐந்து எழுத்துகள்.
அதே போல்
TRUTH.
11.
HURT நான்கு எழுத்துகள்
அதே போல் HEAL.
12.
NEGATIVE எட்டு எழுத்துகள்
அதே போல POSITIVE.
13.
FAILURE ஏழு எழுத்துகள்
அதே போல SUCCESS.
14.
BELOW ஐந்து எழுத்துகள்.
அதே போல ABOVE.
15.
CRY மூன்று எழுத்துகள்
அதே போல JOY.
16.
ANGER ஐந்து எழுத்துகள்
அதே போல HAPPY.
17.
RIGHT ஐந்து எழுத்துகள்
அதே போல WRONG.
18.
RICH நான்கு எழுத்துகள்
அதே போல POOR.
19.
FAIL நான்கு எழுத்துகள்
அதே போலPASS.
20.
KNOWLEDGE ஒன்பது எழுத்துகள்
அதேபோல IGNORANCE.
வியப்பாக
இருக்கிறது அல்லவா இந்த ஒற்றுமையை அறியும் போது!
இதிலிருந்து
அறியப்படும் நீதி என்ன என்றால், “LIFE is like
a double edged sword, but the choice we make determines our future.”
இத்தகவல்
உங்களுக்குப் பிடித்திருக்கிறதுதானே!
*****
குறுகிய கால மகிழ்ச்சியின் குறைபாட்டை விளக்கும் கதை!
படித்ததில் பிடித்த கதையொன்று.
இந்தக் கதையோடு நீதியும் அடங்கி இருக்கிறது.
நம் முன்னோர்கள் இப்படித்தானே நமக்கு கதை சொன்னார்கள்.
அப்படி ஒரு கதை.
ஒரு ஜாடி முழுவதும் தானியம் நிரப்பி, அதன் மேல் ஒரு எலியை விட்ட
போது, அதுக்குத் தன்னை சுற்றி இவ்வளவு உணவு இருக்கிறதே என்று பயங்கர குஷி.
இனி உணவை தேடி ஓடாமல் சந்தோஷமாய் வாழ்க்கையை கழிக்கலாம் என்று
எண்ணி தினமும் தன்னை சுற்றியிருந்த தானியத்தை உண்டது.
நாளாக நாளாக ஜாடியில் உள்ள தானியம் குறைந்து கொண்டே போய், ஒரு
நாள் தீர்ந்தே விட்டது.
எலி இப்பொழுது ஜாடிக்குள் நிரந்தரமாய் மாட்டிக்கொண்டு விட்டது.
அதனால் வெளியேற முடியவில்லை.
இனி தினம் யாராவது
தானியம் போட்டால் மட்டுமே அதற்கு உணவு. யாரும் போடவில்லை என்றால் பட்டினியால்
சாக வேண்டியதுதான்.
அப்படியே யாரவது போட்டாலும் போடுவதை மட்டுமே சாப்பிட முடியும்.
விரும்பிய அளவு சாப்பிட முடியாது.
இதிலிருந்து கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.
1. குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல. அவை அழிவுப்
பாதைக்கே கொண்டு செல்லும். அவை நீண்ட கால பொறிகளுக்கு வழிவகுத்து நிரந்தரமாக சிக்க
வைத்து விடும்.
2. சுலபமாக கிடைக்கும் எதுவும் அதற்கு அடிமை ஆக்கிச் சொகுசாய்
வாழப் பழக்கி, முன்னேற்றத்தை தடுத்து, வாழ்வை நாசமாக்கி விடும்.
3. தெரிந்த ஒரு கலையை உபயோகிக்காமல் சோம்பேறியானால், அந்த கலையை
இழக்க நேரிடும்.
4. சரியான நேரத்தில் சரியான செயல்களை செய்யாமல் விட்டால் வாழ்க்கையையே
இழக்க நேரிடும். மனதுக்கு பிடித்ததைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலைக்கு கட்டாயமாக தள்ளப்படவும்
நேரிடும்.
பிறர் தரும் இலவசங்களை நம்பியே வாழ்வோருக்கு இப்படித்தான் ஒரு
நிலை ஏற்படுமோ?!
*****
தமிழ்நாடு அரசின் ‘தோழி’ பெண்கள் தங்கும் விடுதிக்கு விண்ணப்பிக்க…
பணிபுரியும்
மகளிருக்கான மாதம் 300 ரூபாய்க்கு ‘தோழி’ பெண்கள் தங்கும் விடுதி தமிழக அரசால் தொடங்கப்படுகிறது.
சென்னை,
செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம்
ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்விடுதிகளில்
சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, வாஷிங்
மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோவேவ்,
வாட்டர் கூலருடன் கூடிய ஆர்.ஓ. வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள்
என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது.
குடும்பங்கள்
/ உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவதற்கான விடுதி வழங்கப்படுவதில்லை.
இவ்விடுதிகளில்
தங்கும் மகளிர் இரவு 10:00 மணிக்குள் விடுதிக்கு வந்து விடவேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில்
பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றாற் போல விடுதிக்கு வரலாம்.
தமிழ்நாடு
அரசின் ‘தோழி’ விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
மேலும்,
techexe@tnwwhcl.in
என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் சந்தேகங்களையும்
நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இது
குறித்த மேலதிக விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
இவ்விடுதிகளுக்கு
விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****