Thursday 22 September 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 23.09.2022 (வெள்ளி)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

23.09.2022 (வெள்ளி)

தமிழ்ச் செய்திகள்

நெப்டியூன் கோளின் துல்லிய படத்தைப் படம் பிடித்து வெளியிட்டுள்ளது உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ்வெப். இப்படத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.

மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக மத்திய அரசின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு வேலைக்காக 73.99 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தின் இன்ப்ளூயன்ஸா காய்ச்சலின் பாதிப்பு 1200 ஐக் கடந்தது.

இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி முதலிடத்தைப் பெற்றார். அண்மையில் இவர் உலகப் பணக்காரர்களின் வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2026 இல் இரட்டிப்பாகும் என கிரேடிட் ஸ்விஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****

English News

The James Webb telescope, the world's largest telescope, has captured a precise image of the planet Neptune. The picture has been released by the American space agency NASA.

Tamil Nadu ranks first in the medical insurance scheme of the state governments, according to the report of the central government.

The Department of Employment and Training has announced that 73.99 lakh people are waiting for government jobs in Tamil Nadu.

Influenza cases in Tamil Nadu have crossed 1200.

Gautam Adhani tops the list of India's richest people. It is noteworthy that recently he took the second place in the list of the world's richest people.

The number of Indian billionaires will double by 2026, according to Credit Suisse.

The Chennai Meteorological Department has said that there is a possibility of moderate rain in the coastal districts.

***For School Prayer***

No comments:

Post a Comment