Wednesday, 28 September 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 29.09.2022 (வியாழன்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

29.09.2022 (வியாழன்)

தமிழ்ச் செய்திகள்

நியாய விலைக் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் உள்ளிட்ட 4000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குப் பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட 8 அமைப்புகளை ஐந்தாண்டுகள் வரை தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக அந்த அமைப்புகளின் இணையதளம் உள்ளிட்ட சமூக ஊடகப் பக்கங்களையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சண்டிகர் விமான நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இன்று தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வளிமண்டல் கீழடுக்குச் சுழற்சி காரணமாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****

English News

The Tamil Nadu government has ordered to fill 4000 posts including salesmen and packers in fair price shops.

Health Minister Ma. Subramanian said that dengue fever is under control in Tamil Nadu. He also said that School Education Minister Anbil Mahesh Poiyamozhi has been diagnosed with swine flu.

Union Home Ministry has issued an order banning 8 organizations including Popular Front of India for up to five years. Due to this ban, social media pages including website of those organizations have also been ordered to be blocked.

Chandigarh Airport is named after freedom fighter Bhagat Singh.

The Chennai Meteorological Department has informed that 15 districts including Thanjavur, Nagapattinam, Mayiladuthurai and Thiruvarur are likely to receive heavy rain due to the atmospheric circulation.

***For School Prayer***

No comments:

Post a Comment