Tuesday 6 September 2022

இன்றைய செய்திகள் – 07.09.2022 (புதன்)

இன்றைய செய்திகள் – 07.09.2022 (புதன்)

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10.00 மணியளவில் வெளியிடப்படுகிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தென் மாவட்டங்களுக்குச் செல்கிறார்.

மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அவசர கால அனுமதியை வழங்கியுள்ளது.

குரல் மூலம் கொரோனாவைக் கண்டறிவதற்கான அலைபேசி செயலியை நெதர்லாந்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

லக்னோவில் 1200 ரூபாய் கோடி மதிப்புள்ள மெத்தாபேட்டமைன் பொதைப் பொருளைப் பறிமுதல் செய்தது டெல்லி காவல் துறை. இந்திய அளவில் முதல் முறையாக மிக அதிக அளவில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணையிலிருந்து 1.25 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் காவிரியின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூன்றாவது நாளாகத் தொடர்ந்து பெங்களூரு நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

No comments:

Post a Comment