சூத்திரங்களின் அட்டவணையை மனதில் பதிய வையுங்கள்!
இணைகரம், நாற்கரம், சாய்சதுரம்,
சரிவகம் ஆகியவற்றின் பரப்பளவுக்கான சூத்திரங்களைப் பார்த்து விட்டோம். அடுத்து நாம்
பார்க்க வேண்டியது அவற்றின் சுற்றளவுக்கான சூத்திரங்கள்தானே என்று நீங்கள் கேட்பது
எனக்குப் புரிகிறது.
அவற்றின் சுற்றளவுக்கான சூத்திரங்கள்
என்பது அவற்றின் நான்கு பக்கங்களின் கூடுதல்தான்.
நாற்கரத்திற்கும், சரிவகத்திற்கும்
நான்கு பக்கங்களும் சமமாக அமையாது என்பதால் நான்கு பக்க அளவுகளை a, b, c, d எனும் மாறிகளால்
எடுத்துக் கொண்டால் அவற்றின் சுற்றளவு என்பது a + b + c + d அலகுகள்தான் அல்லவா?
இணைகரத்திற்கு எதிரெதிர்
பக்கங்கள் சமம் என்பதால் அவற்றின் எதிரெதிர் பக்கங்களை a, b எனும் மாறிகளால் எடுத்துக்
கொண்டால் 2a + 2b அலகுகள் என அதன் சுற்றளவுக்கான சூத்திரம் அமையும். 2a + 2b என்பதில்
உள்ள 2 ஐப் பொதுவாக வெளியே எடுத்துக் கொண்டால் 2(a + b) அலகுகள் என இணைகரத்தின் சுற்றளவுக்கான
சூத்திரம் அமையும்தானே?
சாய்சதுரத்திற்கு நான்கு
பக்கங்களும் சமம் என்பதால் சமமான பக்கத்தை a என்ற மாறியால் எடுத்துக் கொண்டால் அதன்
சுற்றளவுக்கான சூத்திரம் 4a அலகுகள் என அமையும் அல்லவா?
இதே சூத்திரம்தான் சதுரத்தின்
சுற்றளவுக்கும் அமையும் அல்லவா? ஆம். சதுரம், சாய்சதுரம் ஆகிய இரண்டு வடிவங்களுக்கும்
நான்கு பக்கங்களும் சமம்தானே? அதனால் அதன் சுற்றளவுக்கான சூத்திரம் 4a அலகுகள் என்றுதான்
அமையும்.
இதுவரை நாம் சொன்ன கருத்துகள்
உங்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
அடுத்ததாக நாம் இதுவரை பார்த்த
சூத்திரங்களை அட்டவணைப்படுத்திக் கொள்வோம். இது எதற்காக என்றால் நீங்கள் இந்தச் சூத்திரங்களைப்
பன்முறைப் படித்து மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்வதற்காக. அப்படிப் பதிய வைத்துக்
கொண்டால்தான் கணக்கீடுகளைச் செய்யும் போது உரிய சூத்திரங்களை உடனடியாக நினைவிற்குக்
கொண்டு வந்து கணக்கீடுகளை உங்களால் சரியாகவும் விரைவாகவும் செய்ய இயலும்.
இதோ சுற்றளவு மற்றும் பரப்பளவுக்கான
சூத்திரங்கள் அடங்கிய அட்டவணை.
வ.எண் |
வடிவம் |
சுற்றளவு (அலகு) |
பரப்பளவு (ச.அலகு) |
1. |
சதுரம் |
4a |
a2 |
2. |
செவ்வகம் |
2(l+b) |
lb |
3. |
முக்கோணம் |
a+b+c |
½bh |
4. |
வட்டம் |
2 |
|
5. |
நாற்கரம் |
a+b+c+d |
½d(h1+h2) |
6. |
சரிவகம் |
a+b+c+d |
½h(a+b) |
7. |
சாய்சதுரம் |
4a |
½d1d2 |
8. |
இணைகரம் |
2(a+b) |
bh |
வடிவங்கள் குறித்து
அடிப்படையாக நாம் அறிய வேண்டிய அனைத்தையும் அறிந்து விட்டோம். அடுத்ததாக நாம் எதைப்
பார்க்க வேண்டும் என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் கேட்கிறது. அதை நாளை ஆவலுடன்
எதிர்பாருங்கள்.
*****
No comments:
Post a Comment