Tuesday, 20 September 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 21.09.2022 (புதன்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

21.09.2022 (புதன்)

தமிழ் செய்திகள்

இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முக்கியத் திட்டங்கள், தீபாவளி போனஸ், மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

இன்ப்ளூயன்ஸ்யா காய்ச்சல் எதிரொலியாக இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 3 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் ப்ளூ காய்ச்சலைத் தொடர்ந்து டெங்குக் காய்ச்சலின் பரவலும் அதிகரித்து வருகிறது.

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டியுள்ளதால் முதல் பருவ விடுமுறைக்குப் பின் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் தொடங்கும். பிற வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 6 லிருந்து வகுப்புகள் துவங்கும்.

மெக்சிகோவில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். பழமையான கட்டடங்கள் பலவும் இடிந்து விழுந்துள்ளன.

ஐப்பானில் ஏற்பட்டுள்ள சூப்பர் டைபூன் ‘நான்மடோல்’ காற்றுச் சூறாவளியால் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குளோனிங் முறையில் முதல் ஓநாயை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இந்த ஓநாய்க்கு மாயா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

English News – 21.09.2022 (Wednesday)

A cabinet meeting will be held today under the chairmanship of Prime Minister Narendra Modi. In this meeting important schemes, Diwali bonus, dearness allowance of central government employees are to be discussed.

Tamil Nadu Health Minister M. Subramanian said that 1000 special medical camps are conducted for influenza fever in all over Tamilnadu today.

 MBBS and BDS medical courses online application starts from September 22 to October 3.

Following the Flu fever in Tamil Nadu, the prevalence of dengue fever is also increasing.

Classes for students from Class I to V will begin from October 10 after the first term vacation as teachers need to be trained in the ‘Ennum Ezhuthum’ program. Classes for other students will start from October 6.

A powerful 7.5 rictor earthquake has killed one person in Mexico. Many old buildings have also collapsed.

More than 90 lakh people have been evacuated to safer places due to the super typhoon 'Nanmadol' in Japan.

Chinese scientists have achieved a record by cloning the first wolf. This wolf is named Maya.

*** (For School Prayer) ***

No comments:

Post a Comment