Sunday 25 September 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 26.09.2022 (திங்கள்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

26.09.2022 (திங்கள்)

தமிழ் செய்திகள்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல் மாநில பயணமாக இன்று கர்நாடகம் வருகிறார். கர்நாடகத்தில் அவர் தசரா விழாவைத் தொடங்கி வைக்கிறார்.

ஒரு வார விடுமுறைக்குப் பின் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு இன்று புதுச்சேரியில் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுடன் துவங்குகின்றன.

கோவையில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அங்கு ஆய்வு செய்ய விரைந்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்பதும் அது வதந்திக்காகப் பரப்பப்பட்டது என்பதும் சர்வதேச ஊடகங்களின் உண்மை சரிபார்ப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த பியானோ புயல் தாக்கியதில் கனடா முழுவதும் வெள்ளக்காடாய்க் காட்சியளிக்கிறது.

இன்று விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

English News

President Draupadi Murmu is coming to Karnataka today on his first state visit. He inaugurates the Dussehra festival in Karnataka.

After a week's holiday, schools in Puducherry will begin with the quarterly exams for classes I to VIII today.

Tamil Nadu DGP Shailendra Babu has rushed to investigate the ongoing petrol bomb attack in Coimbatore.

A fact-check by the international media has found that the report that Chinese President Xi Jinping is under house arrest is not true and was spread as a rumour.

A powerful piano storm has hit Canada with flash floods.

According to the Chennai Meteorological Department, 14 districts including Villupuram, Cuddalore, Kallakurichi, Thanjavur, Tiruvarur, Nagapattinam, Mayiladuthurai, Perambalur, Ariyalur are likely to experience heavy rain today.

*** (For School Prayer) ***

No comments:

Post a Comment