Monday, 26 September 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 27.09.2022 (செவ்வாய்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

27.09.2022 (செவ்வாய்)

தமிழ்ச் செய்திகள்

அரசு அங்கீகாரம் இல்லாத மனைகளைப் பதிவு செய்யும் பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மதுரை உயர்நீதி மன்றக் கிளை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க உருவாக்கப்பட்ட ஆபரேஷன் கருடா இன்டர்போலுடன் இணைந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆபரேஷன் கருடா சி.பி.ஐ.யுடன் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றடைந்தார்.

இத்தாலியில் முதல் பெண் பிரதமர் ஆகிறார் ஜார்ஜியா மெலோனி.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.50 ரூபாயாகச் சரிந்துள்ளது. இச்சரிவு இதுவரை இல்லாத அளவாகும்.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாகத் தமிழகத்தின் 23 மாவட்டங்களில் செட்பம்பர் 26 முதல் 29 வரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****

English News

The Madurai High Court branch has said that strict action should be taken against the registrars who register plots without government approval.

Operation Garuda, which was created to curb drug trafficking, has been mobilized to work with Interpol. It is noteworthy that currently Operation Garuda is working in collaboration with the CBI.

Prime Minister Narendra Modi arrived in Japan to attend the funeral of former Japanese Prime Minister Shinzo Abe.

Giorgia Meloni becomes Italy's first female Prime Minister.

The Indian rupee fell to Rs 81.50 against the dollar. The decline is unprecedented.

The Chennai Meteorological Department has informed that 23 districts of Tamil Nadu are likely to receive heavy rains from Setbumper 26 to 29 due to the atmospheric circulation.

***For School Prayer***

No comments:

Post a Comment