இன்றைய செய்திகள் – 06.09.2022 (செவ்வாய்)
பிரிட்டனின் புதிய பிரதமாகிறார்
லிஸ் டிரஸ். இவர் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பள்ளிகளில் பயின்று
உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை
முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில்
உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ‘இந்தியாவின் பெருமை’ எனப் பாராட்டியுள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால்
வரத்து குறைந்ததால் கிலோ ரூ. 20 க்கு விற்று வந்த தக்காளியின் விலை ரூ. 45 ஆக அதிகரித்துள்ளது.
ஐந்து மணி நேரமாகத் தொடர்ந்து
பெய்த மழையால் இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரமான பெங்களூரு வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
*** (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***
No comments:
Post a Comment