இன்றைய செய்திகள் – 10.09.2022 (சனி)
அக்டோபர் 30 இல் நடைபெறுவதாக
இருந்த குரூப் 1 முதனிலைத் தேர்வு நிர்வாகக் காரணங்களால் நவம்பர் 19 இல் நடைபெறும்
என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கடன் வழங்கும் செயலிகளுக்குக்
கடுமையான கட்டுபாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி
பெறாத செயலிகளை நீக்கவும் முடிவு செய்துள்ளது.
நீட் தேர்வு எழுதிய அரசுப்
பள்ளி மாணவர்கள் 80 சதவீதம் வரை தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அரசுப்
பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு தேர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும்
எழுந்துள்ளது.
இங்கிலாந்து அரசி எலிசபெத்
மகாராணியின் மறைவுக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அரசியின் மறைவை
ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக செப்டம்பர் 11 ஆம் நாள் தேசிய துக்க தினமாக
அனுசரிக்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்
பறக்க விடப்படும் எனவும் அறிவித்துள்ளது. உலகில் மிக நீண்ட காலம் அரசியாக இருந்தவர்
என்ற சிறப்புக்குரியவர் எலிசபெத் என்பது குறிப்பிடத்தக்கது. அரசி எலிசபெத் திருமணத்திற்கு
மகாத்மா காந்தியடிகள் கைக்குட்டையைப் பரிசளித்தார் என்பதும் அக்கைக்குட்டையை அரசி எலிசபெத்
எப்போதும் நினைவில் வைத்துப் பாதுகாத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவின் செவ்வாய் கிரகப்
பயணத்துக்கு உதவும் வகையிலான விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்க துணை செய்யும் வேகத்தைக்
குறைக்கும் தொழில் நுட்பம் வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
*** (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***
No comments:
Post a Comment