Tuesday, 20 September 2022

மெய்யெழுத்துத் தொடர்பான பயிற்சிக்கு உதவும் சொற்றொடர்கள்

மெய்யெழுத்துத் தொடர்பான பயிற்சிக்கு உதவும் சொற்றொடர்கள்

க்

அக்கா தந்த சொக்காய்

ங்

அங்கம் எங்கும் தங்கம்

ச்

பச்சை நிற குச்சி

ஞ்

அஞ்சலில் வந்த மஞ்சள்

ட்

பட்டு செய்த பட்டம்

ண்

வண்டியில் வந்த பண்டம்

த்

அத்தை தந்த முத்தம்

ந்

சந்தில் கிடந்த பந்து

ப்

அப்பா தந்த ஆப்பம்

ம்

தம்பி தந்த கம்பி

ய்

அய்யா தந்த கொய்யா

ர்

ஊர் கூடி இழுத்த தேர்

ல்

இல்லத்தில் இருந்த வெல்லம்

வ்

கவ்விப் பிடித்த கொவ்வை

ழ்

வாழ்வில் ஒரு முறையேனும் கூழ் குடி

ள்

துள்ளி ஓடும் வெள்ளை குதிரை

ற்

ஆற்று மணலில் ஊற்று

ன்

அன்னை வளர்த்த தென்னை

மெய்யெழுத்துகளை அறிமுகம் செய்யவும் மெய்யெழுத்துகள் தொடர்பான சொற்கள் மற்றும் சொற்றொடர்களை அறிமுகம் செய்யவும் பின்வரும் பாடலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அக்கம் பக்கம் பார்த்தால்

அங்கும் இங்கும் யாருமில்லை

மிச்ச சொச்சம் ஏதுமில்லாமல்

பஞ்சப்பாட்டு பாடாமல்

கட்டம் போட்ட சட்டை போட்ட

அண்ணன் கையில் அவ்வளவு பண்டம்

தத்திப் பிடிக்கப் பார்த்தால்

பந்துப் போல பறந்து

அப்பால் ஓடி தப்பிப் போனவனைத்

தும்பிப் போல பாய்ந்த தம்பியும் பிடிக்க முடியவில்லையே

நெய்யில் செய்த பண்டம் எல்லாம்

தேர்த் திருவிழாவில் பார்த்து பார்த்து வாங்கியதன்றோ

வெல்லம் போல இனிக்கும் எல்லாம்

இவ்விதம் செவ்விதாய் அண்ணன் கையில் போனது

தாழ்வில்லை இனி கூழ் குடித்து மகிழ்ந்திருக்கலாம் என்ற போது

துள்ளி ஓடி வந்தானே அள்ளிச் சென்ற அண்ணன்

ஏற்றமுடன் தந்தானே ஏமாற்றாமல் பண்டங்களை எல்லாம்

உன்னை என்னை என்று எல்லாரிடமும் குறும்பு செய்யும் அண்ணன்

*****

No comments:

Post a Comment