உயிரெழுத்துகள் தொடர்பான பயிற்சிக்கு உதவும் சொற்றொடர்கள்
அ |
அம்மா தந்த அப்பம் |
ஆ |
ஆட்டம் போட்ட ஆடு |
இ |
இலையில் இருந்த இனிப்பு |
ஈ |
ஈரத்தில் மொய்த்த ஈக்கள் |
உ |
உருட்டிப் பிடித்த உருண்டை |
ஊ |
ஊதி வைத்த ஊதா பலூன் |
எ |
எருமை மேலேறிய எறும்பு |
ஏ |
ஏணி மேல் ஏறு |
ஐ |
ஐந்து மிட்டாய் கேட்ட ஐவர் |
ஒ |
ஒரே ஒரு ஒட்டகம் |
ஓ |
ஓடத்தில் இருந்த ஓலை |
ஔ |
ஔவை தந்த ஔடதம் |
இத்துடன் அழ.
வள்ளியப்பா அவர்களின் இப்பாடலும் உயிரெழுத்துகளின் அறிமுகத்திற்கும் உயிரெழுத்தில்
தொடங்கும் சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் அறிமுகத்திற்கும் பெரிதும் உதவும்.
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றிச் சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்
*****
No comments:
Post a Comment