Tuesday, 27 September 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 28.09.2022 (புதன்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

28.09.2022 (புதன்)

தமிழ்ச் செய்திகள்

காய்ச்சல் அறிகுறி காரணமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாகத் தமிழகம் திகழ்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 328 குறைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சவரன் தங்கம் 37,000 க்குக் கீழ் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் யமுனை நதியில் அபாய அளவைத் தாண்டி நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விண்கற்களிடமிருந்து பூமியைக் காப்பாற்ற நாசா DART எனும் கிரகப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத்தை நிறுவியுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக டிடிமோஸ் பைனரி என்ற பூமியை நோக்கி வந்த சிறுகோளின் திசையை நாசா மாற்றியுள்ளது. இதன் மூலம் பூமியை நோக்கி வரும் விண்கற்கள் மற்றும் சிறுகோள்களை பூமியின் மீது மோதாமல் திசை மாற்றும் சாத்தியம் உருவாகியுள்ளது.

***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****

English News

School Education Minister Anbil Mahesh Poiyamozhi has been admitted to Kaveri Hospital in Alwarpet, Chennai due to fever symptoms.

Chief Minister M. K. Stalin has said that Tamil Nadu is the leading state in terms of development indices.

Gold price is decreased Rs. 328 per sovereign. It is noteworthy that after a long time a Sovereign gold has come below Rs. 37,000.

People on the banks of the Yamuna River in Delhi have been evacuated to safer places as the water level has increased beyond the danger level.

NASA has established the Office of Planetary Defense Coordination, DART, to protect Earth from asteroids. Through this project, NASA has changed the direction of the Didymos binary asteroid that came towards the Earth. Through this, it is possible to divert the meteors and asteroids coming towards the earth without colliding with the earth.

***For School Prayer***

No comments:

Post a Comment