மெல்ல கற்போருக்கான பதினான்காவது வாரப் பயிற்சி
மெல்ல கற்கும்
மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி அடங்கிய பயிற்சி அமைப்பைப்
பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
மெல்ல கற்போருக்கான பதினான்காவது வாரப் பயிற்சி
மெல்ல கற்கும்
மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி அடங்கிய பயிற்சி அமைப்பைப்
பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!
உங்களுக்கு இப்போதே ஒரு நிரப்பப்படாத
காசோலை தரப்படுகிறது
நீங்கள் விரும்பிய தொகையை
நிரப்பிக் கொள்ளலாம்
அப்படி நிரப்பிக் கொண்டால்
நீங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்துபவராகிறீர்கள்
நிரப்ப தயங்கினால் நீங்கள்
வாய்ப்புகளைப் பின்னடையச் செய்பவராகிறீர்கள்
வாய்ப்புகளைக் கொடுக்கத்தான்
முடியும்
பயன்படுத்திக் கொள்ளாமல்
போவதற்கு யார் என்ன செய்ய முடியும்
உங்கள் தயக்கங்களாலோ பயங்களாலோ
வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல் இருந்து விடாதீர்கள்
சரியான வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல்
விட்டு விடாதீர்கள்
வாய்ப்புகள் கிடைக்கும் போதும்,
அமையும் போதும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
இதுவே எல்லா காலத்திலும் வெற்றியின் ரகசியமாக இருக்கிறது
*****
மெல்ல கற்போருக்கான பதின்மூன்றாவது வாரப் பயிற்சி
மெல்ல கற்கும்
மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி அடங்கிய பயிற்சி அமைப்பைப்
பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
தமிழ் மெல்ல கற்போருக்கான வடமொழிச் சொற்கள் பயிற்சி
தமிழ் மெல்ல
கற்போருக்கான வடமொழிச் சொற்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :
எவரெஸ்ட்
ரோஜா
தாஜ்மஹால்
ஷாஜஹான்
மும்தாஜ்
ஜான்சிராணி
ஜவஹர்லால் நேரு
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
ரம்ஜான்
கிறிஸ்துமஸ்
பாகிஸ்தான்
ஜப்பான்
அஸ்ஸாம்
அஸ்கா
குஸ்கா
காஷ்மீர்
ஸ்ரீநகர்
ஜாங்கிரி
ஜிலேபி
குலாப்ஜாமூன்
பாதுஷா
பஜ்ஜி
அஜ்மீர்
*****
நவம்பர் 2023 ஆம் மாதத்திற்கான சிறார் திரைப்படம் – தி கிட்
தி கிட் திரைப்பட விமர்சனம் :
தி கிட் என்ற திரைப்படம்
1921 இல் சார்லி சாப்ளின் நடித்து இயக்கி வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின்
இசையமைப்பாளரும் படத்தொகுப்பாளரும் சார்லி சாப்ளினே ஆவார். இத்திரைப்படத்தில் குழந்தையாக
ஜாக்கி கூகன் நடித்துள்ளார். இத்திரைப்படம் அமெரிக்க மௌன நகைச்சுவை நாடக திரைப்படமாகும்.
தி கிட் என்ற இத்திரைப்படம்
சார்லி சாப்ளினின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். இது அவரது சுயசரிதை படைப்பு
ஆகும். இத்திரைப்படத்தை அவர் தனது குழந்தை பருவ அனுபவத்தின் அடிப்படையில் இயக்கியுள்ளார்.
நாடோடியான சாப்ளின் ஒரு தாயால்
கைவிடப்பட்ட குழந்தையைத் தயக்கத்துடன் காப்பாற்றுகிறார். அதைத் தொடர்ந்து நடக்கும்
சம்பவங்களே தி கிட் என்ற திரைப்படத்தின் கதையாகும்.
சாப்ளின் குழந்தையை வளர்க்கிறார்.
அக்குழந்தையின் தாய் இறுதியில் குழந்தையைக் கேட்கும் போது சாப்ளினும் குழந்தை கூகனும்
தப்பிக்க முயற்சிக்கின்றனர். இறுதியில் குழந்தை தாயிடம் சேர்கிறது. சாப்ளினும் குழந்தையை
வந்து அடைகிறார். இவற்றை சார்லி சாப்ளின் தமக்கே உரிய நகைச்சுவை காட்சிகளுடன் திரைப்படமாக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் தேவையான உரையாடல்கள் படக்காட்சிகளிடையே வாக்கியங்களாக வெளிப்படுகின்றன.
இத்திரைப்படம் குழந்தைகளைக்
கவரும் திரைப்படம் எனில் அது மிகையில்லை. சாப்ளின் பிழைப்பிற்காகக் குழந்தை கூகனைக்
கொண்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கச் செய்வதும், பிறகு அவர் பழுது பார்ப்பவராகச் சென்று
பழுது பார்த்து சம்பாதிப்பதும் குழந்தைகள் ரசிக்கும் வேடிக்கையான காட்சியாகப் படத்தில்
இடம் பெற்றுள்ளது.
துவக்கம் முதல் இறுதி வரை
குழந்தைகள் உணர்ச்சிகரமாகவும் சிரித்த வண்ணமாகவும் பார்க்கும் வகையில் இத்திரைப்படம்
அமைந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளையில் அமைந்த மௌன
திரைப்படம் எனினும் இத்திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கமும் உண்டாக்கும் உணர்வுகளும்
எக்காலத்திற்கும் பொருந்துவனவாகவே உள்ளன.
இத்திரைப்படம் 2011 ஆம் ஆண்டு
ஐக்கிய மாகாணங்களின் தேசிய திரைப்பட பதிவேட்டில் பாதுகாப்பதற்கான சிறந்த திரைப்படமாகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இவ்விமர்சனத்தைக் காணொளியாகக்
காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி இயக்கவும்.
*****
மெல்ல கற்போருக்கான பனிரெண்டாவது வாரப் பயிற்சி
மெல்ல கற்கும்
மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி அடங்கிய பயிற்சி அமைப்பைப்
பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
தமிழ் மெல்ல கற்போருக்கான ‘சொல்லக்கேட்டு எழுதுதல்’ பயிற்சி
தமிழ் மெல்ல
கற்போருக்கான ‘சொல்லக் கேட்டு எழுதுதல்’ பயிற்சிக்கான சொற்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு
:
கத்தரிக்காய்
கடலைக்கொட்டை
முத்துச்சிப்பி
பருத்திச்செடி
பஞ்சுமிட்டாய்
காகிதப்பூ
தொட்டாசிணுங்கி
எறும்புப்புற்று
தேன்கூடு
மரக்கிளை
நீரோடை
ஏற்றத்தாழ்வு
புதிர்க்கதைகள்
படக்கதைகள்
வண்ணப்பூக்கள்
இனிப்புப்பண்டம்
பூச்செடிகள்
திரைப்படம்
வண்ணக்குமிழி
குட்டிப்பையன்
பாட்டுச்சத்தம்
கடற்கரை
குட்டிக்கரணம்
ஈரமணல்
தார்ச்சாலை
ஊர்த்தலைவர்
எதிர்ச்சொற்கள்
மேலே × கீழே
உள்ளே × வெளியே
சூடான × குளிர்ச்சியான
பழைய × புதிய
முன்னால் × பின்னால்
அருகில் × தொலைவில்
*****